கர்நாடகாவில் அரசியல் குழப்பம் இல்லை: எடியூரப்பா

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. எடியூரப்பா எதிர்ப்பாளர்கள், விரைவில் முதல்வர் மாற்றம் செய்யப்படுவார் என பேசி வருகின்றனர்.இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் எந்த அரசியல் குழப்பமும் இல்லை. ஒரு சிலர்
கர்நாடகா, எடியூரப்பா, பாஜ, முதல்வர், karnataka,Yediyurappa

பெங்களூரு: கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. எடியூரப்பா எதிர்ப்பாளர்கள், விரைவில் முதல்வர் மாற்றம் செய்யப்படுவார் என பேசி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் எந்த அரசியல் குழப்பமும் இல்லை. ஒரு சிலர் மீடியாவில் முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதேதோ கூறி வருகின்றனர். ஆரம்பம் முதலே, அவர்கள் இதனை செய்து வருகின்றனர். அவர்களை, கட்சி மேலிட பொறுப்பாளர் சந்திக்கவில்லை. இதனால், எந்த குழப்பமும் இல்லை. அமைச்சர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஏதேனும் பிரச்னை இருந்தால், அது குறித்து பேசி தீர்க்கப்படும். பா.ஜ., எம்எல்சி விஸ்வநாத்தின் கருத்து குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.


latest tamil news



மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஆலோசிக்க உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. அரசியல் விவகாரம், வெள்ளம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். கோவிட் 3வது அலை, ஊரடங்கு தளர்வு குறித்தும் ஆலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murphys lae -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202108:43:07 IST Report Abuse
murphys lae idupu kilaravan yen thodirraan?
Rate this:
Cancel
18-ஜூன்-202123:44:39 IST Report Abuse
ஆப்பு உங்க பதவிக்கு ஆபத்து வந்தாலே காவேரில அணை கட்டப் போறோம்னு ஆரம்பிச்சுருவீங்களே... இப்போ அதானே செய்யறீங்க. மத்திய அரசுக்கு புல்வாமா மாதிரி...
Rate this:
Cancel
18-ஜூன்-202121:04:49 IST Report Abuse
ஆப்பு மூணு தலை முறைக்கு ஆட்சி செய்யுங்க. மக்களுக்கு மட்டும் 60 வயதில் ஓய்வு. ஆட்சி செய்ய அறிவு, திறமை, வயசெல்லாம் தேவையே இல்லை. நான் முதியவர்களை வணங்குகிறேன். ஆனா, பேராசைக்கார பதவி வெறி பிடித்த முதியவர்களை மதிப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X