அமெரிக்க பல்கலைக்கு தலைவராகும் தமிழர்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள, 131 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தொழில்நுட்பம் சார்ந்த பல்கலையான இல்லினாய்ஸ் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக, தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈசம்பாடி நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம், இந்த மையத்தின், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது. தலைவராக வரும் ஆகஸ்ட் 16ம் தேதி பதவியேற்று கொள்ள
Illinois Tech, illinoistech, தமிழர், அமெரிக்க பல்கலை, ராஜகோபால், rajagopal,

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள, 131 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தொழில்நுட்பம் சார்ந்த பல்கலையான இல்லினாய்ஸ் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக, தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈசம்பாடி நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம், இந்த மையத்தின், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது. தலைவராக வரும் ஆகஸ்ட் 16ம் தேதி பதவியேற்று கொள்ள உள்ளார்.

ராஜகோபால், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர். திநகரில் உள்ள வேளாங்கண்ணி மற்றும் மைலாப்பூரில் உள்ள சாந்தோர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் அண்ணா பல்கலையில்(1995-19)ல் இளநிலை பொறியியல் படிப்பையும், (1990-92)ல் எம்பிஏ படிப்பையும் முடித்தார். பின்னர் டாபே மற்றும் காஸ்ட்ரோல் நிறுவனங்களில் பணியாற்றிய அவருக்கு, திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை உள்ளிட்ட இந்திய பல்கலைகழகங்களில் தொழில்முனைவோர் மையங்கள் ஏற்படுத்திய அனுபவம் உண்டு.

ஹூஸ்டன் பல்கலையில் பிஎச்டி படிக்க(1994-98) அமெரிக்கா சென்றார். அவரது தாயார் ஜானகி, தற்போதும் சென்னையில் வசித்து வருகிறார். பிஎச்டி முடித்த உடன், அமெரிக்காவில் பணியாற்றி வரும் ராஜகோபால், கோர்செரா கல்வி மையத்துடன் இணைந்து எம்பிஏ படிப்பை ஆன்லைனில் படிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பட்ட மேற்படிப்பில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. மாணவர் மற்றும் சமூக தொழில்முனைவோர் திட்டங்களில் அவர் ஆர்வம் காட்டி வந்த ராஜகோபால், தற்போது, போஸ்டானில் உள்ள வடகிழக்கு பல்கலையில், வணிகத்துறையில் டீனாக பணிபுரிந்து வருகிறார்.


latest tamil news


இந்நிலையில், இல்லினாய்ஸ் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக ராஜகோபால், ஈசம்பாடி கூறியதாவது: தொழில்துறை சார்ந்த சமூகத்தில் அர்த்தமுள்ள வகையில் பணியாற்றவும், அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வி வழங்குவதே, இல்லினாய்ஸ் தொழில்நுட்ப மையத்தின் நோக்கம் ஆகும். அனைவருக்கும் தொழில்நுட்ப கல்வியை அளிப்பதுடன் அவர்களை டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப உருவாக்கவும் முயற்சி செய்வோம். தொழில்நுட்ப கல்வி அனைவருக்கும் கிடைக்க முயற்சி செய்வோம். வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சார்ந்த விவகாரங்களில், இந்தியாவில் உள்ள ஐஐடி.,க்கள் மற்றும் அண்ணா பல்கலையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
19-ஜூன்-202111:48:48 IST Report Abuse
M S RAGHUNATHAN இவர் அண்ணா பல்கலை கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு மனு அனுப்பி இருந்தால், தேர்ந்து எடுக்கப்படுவாரா ? நிச்சயம் மனு நிராகரிக்கப்படும். ஆரிய வந்தேறி அல்லவா ?
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
19-ஜூன்-202110:17:40 IST Report Abuse
thamodaran chinnasamy மிகவும் நாலா செய்தி ,
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
19-ஜூன்-202109:32:40 IST Report Abuse
M S RAGHUNATHAN திரு விக்ரமன் அந்தப் பெரியவர் பெரியார் தாசன் என்பவரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X