அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிடுகிடுவென உயர்ந்துள்ள விலைவாசி: எல்.முருகன் விமர்சனம்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
சென்னை: திமுக ஆட்சியில் பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு, அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய சுமையாக
TN, BJP, Murugan, DMK, திமுக, பாஜக, எல் முருகன், விலைவாசி, உயர்வு

சென்னை: திமுக ஆட்சியில் பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு, அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது. குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. அதேபோல், எம் சாண்ட், கம்பி, செங்கல் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளது.


latest tamil news


அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா சிமெண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரு மூட்டை சிமெண்ட் 226 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அம்மா சிமெண்ட் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. கட்டுமான பொருட்கள் மட்டுமல்லாமல், தாய்மார்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், சமையல் பொருட்கள், காய்கறிகள் விலையும் அதிகரித்துவிட்டது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், திடீரென பல்வேறு பொருட்களின் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்புடையது அல்ல.


latest tamil news


எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, சிமெண்ட் விலை முதல் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல காய்கறி விலைகள், சமையல் எண்ணெய் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arumugam -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202112:14:47 IST Report Abuse
Arumugam எரிபொருள் விலையை மத்திய அரசு சதம் அடித்ததன் தாக்கம் தான், விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. நீங்கள் மத்திய அரசிடம் எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தலாமே?
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
19-ஜூன்-202111:14:27 IST Report Abuse
தஞ்சை மன்னர் (அ) சிங்கம் களத்தில் இறங்கியிடிச்சி
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
19-ஜூன்-202111:13:05 IST Report Abuse
தஞ்சை மன்னர் சிங்கம் களத்தில் இறங்கியிடிச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X