புடினுக்கு குளிர் கண்ணாடி பரிசளித்த ஜோ பைடன்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மாஸ்கோ: அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஷ்ய பொருட்கள் அமெரிக்காவில் விற்க கட்டுப்பாடுகளை விதித்தார். இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிருப்தி அடைந்தார்.ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்கா ரஷ்யா நட்புறவு குறித்து
joebiden, Biden,Vladimir Putin,புடின்,விளாதிமிர் புடின், ஜோபைடன், பைடன்,

மாஸ்கோ: அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஷ்ய பொருட்கள் அமெரிக்காவில் விற்க கட்டுப்பாடுகளை விதித்தார். இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிருப்தி அடைந்தார்.

ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்கா ரஷ்யா நட்புறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அது நிரந்தரமாக முறிந்துவிட்டது என்று கூறும் அளவுக்கு டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்காமீது கடந்த ஆண்டுவரை கடும் அதிருப்தியில் இருந்தார் விளாடிமிர் புடின்.


latest tamil news



தற்போது அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த இருநாட்டு உறவு குறித்து விரிவாக ஆலோசித்து உள்ளார். இதனையடுத்து ரஷ்ய-அமெரிக்க பொருளாதார ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜோ பைடன் தனக்கு விருப்பமான ரேபான் 'டாப் கன்' குளிர் கண்ணாடியை பரிசாக அளித்துள்ளார். 78 வயதான ஜோ பைடன் ஒரு வித்தியாசமான அமெரிக்க அதிபர் என்று சொல்லலாம். தனக்கு பிடித்த பொருட்கள் குறித்து வெளிப்படையாக ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் நபர் ஆவார்.ரயில் பயணம், கோன் ஐஸ்கிரீம், ரேபான் குளிர்கண்ணாடி உள்ளிட்ட தனக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தையும் இதற்கு முன்னர் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


latest tamil news



அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடனை ரேபான் ஏவியேட்டர் குளிர் கண்ணாடி அணிந்தபடியே பார்க்க முடிந்தது. ஜேம்ஸ்பாண்ட் போல எப்போதும் குளிர் கண்ணாடி அணிந்து வலம்வரும் ஸ்டைலான அதிபராகவே அவர் திகழ்ந்தார். தற்போது புடினுக்கு அவர் குளிர் கண்ணாடிகளைப் பரிசாக அளித்திருப்பது வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
19-ஜூன்-202108:13:15 IST Report Abuse
J. G. Muthuraj பரிசு பொருட்களை அட்டகாசமாக தேர்ந்தெடுக்கிறார் ஜோ பைடன் சைக்கிள், கண்ணாடி, ......மோடிஜிக்கு என்ன பரிசு கொடுப்பார்?......
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜூன்-202120:02:20 IST Report Abuse
Ramesh Sargam ரஷ்யா வே ஒரு கடும் குளிர் பிரதேசம். அப்படி இருக்கையில் புட்டினுக்கு ஏன் குளிர் கண்ணாடி?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூன்-202105:52:20 IST Report Abuse
 Muruga VelUltra violet ray protection ......
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202119:41:49 IST Report Abuse
Easwar Kamal சண்டை போடாம சேர்ந்து இருந்ததன் அந்த சப்பை மூக்கு காரனுக்கு ஆப்பு வைக்க முடியும். ரெண்டு பெரும் சேர்ந்து காரோண விட ரொம்ப கொடூரமா ஏதாவது இருந்த ஏவி விடுங்க. நீங்க ரெண்டு பேரும் ஏதாவது செஞ்சாதான் சீனா ஒலிக்க முடியும். இல்லாவிடில் மொத்த உலக மக்களையும் காவு வாங்கிருவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X