பொது செய்தி

தமிழ்நாடு

பொது சொத்துக்கள் பதிவில் சார் -- பதிவாளர்கள் அலட்சியம்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
சென்னை:'அரசு மற்றும் சமய நிறுவனங்களுக்கு பாத்தியப்பட்ட பொது சொத்துக்கள் தொடர்பாக பத்திரங்கள் பதிவுக்கு வந்தால் நிராகரிக்க வேண்டும்' என்ற உத்தரவை, பெரும்பாலான சார் - பதிவாளர்கள் அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசு திட்டங்கள், நிறுவனங்களுக்கு சொந்தமாக நிலங்கள்; ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளும் உள்ளன. பொது நோக்கத்துக்காக சமய நிறுவனங்களுக்கு

சென்னை:'அரசு மற்றும் சமய நிறுவனங்களுக்கு பாத்தியப்பட்ட பொது சொத்துக்கள் தொடர்பாக பத்திரங்கள் பதிவுக்கு வந்தால் நிராகரிக்க வேண்டும்' என்ற உத்தரவை, பெரும்பாலான சார் - பதிவாளர்கள் அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு திட்டங்கள், நிறுவனங்களுக்கு சொந்தமாக நிலங்கள்; ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளும் உள்ளன. பொது நோக்கத்துக்காக சமய நிறுவனங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களும் உள்ளன. இந்த சொத்துக்களின் பட்டா, சர்வே எண் உள்ளிட்ட விபரங்களை பயன்படுத்தி, பலரும் போலி ஆவணங்களை தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிக்கின்றனர். அதிகாரிகள், அரசியல் ஆதரவால் இவர்கள் தப்பித்து விடுகின்றனர்.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த மோசடிக்கு முடிவு கட்டும் வகையில் 2017ல், சார் - பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. அதில், அரசுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள், சமய நிறுவனங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு வந்தால், அதை நிராகரிக்க வேண்டும்.அதை மீறி பதிவுக்கு ஏற்கும் சார் - பதிவாளர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்,பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இந்த சுற்றறிக்கையை மீறி செயல்படுகின்றனர். அரசு மற்றும் சமய நிறுவனங்களின் சொத்துக்கள் பறிபோக இதுவே காரணம்.எனவே, இந்த சுற்றறிக்கையின்படி, தவறு செய்த சார் - பதிவாளர்கள் மீது பதிவுத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பொது பயன்பாட்டுக்கான சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிதாக பொறுப்பேற்று உள்ள தமிழக அரசு, இந்த விஷயத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது, கண்டிப்பு காட்ட தயங்கக் கூடாது என்பதே மக்களின் கோரிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X