மீண்டும் சரிகிறது ஆடை ஏற்றுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் சரிகிறது ஆடை ஏற்றுமதி

Added : ஜூன் 18, 2021
Share
திருப்பூர்:வளர்ச்சிப்பாதைக்கு திரும்பிய இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கொரோனா இரண்டாவது அலையால், மீண்டும் சரிய துவங்கியுள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், படிப்படியாக வளர்ச்சி அடைந்து, 2018 - 19ம் நிதியாண்டில், 1.12 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. சர்வதேச அளவில் தொற்று பரவல், ஆடை சந்தை மூடல் உள்ளிட்டவற்றால், 2019 - 20ம் நிதியாண்டில், 1.10 லட்சம் கோடி ரூபாயாகவும், 2020 - 21ம்

திருப்பூர்:வளர்ச்சிப்பாதைக்கு திரும்பிய இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கொரோனா இரண்டாவது அலையால், மீண்டும் சரிய துவங்கியுள்ளது.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், படிப்படியாக வளர்ச்சி அடைந்து, 2018 - 19ம் நிதியாண்டில், 1.12 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. சர்வதேச அளவில் தொற்று பரவல், ஆடை சந்தை மூடல் உள்ளிட்டவற்றால், 2019 - 20ம் நிதியாண்டில், 1.10 லட்சம் கோடி ரூபாயாகவும், 2020 - 21ம் நிதியாண்டில், 90 ஆயிரத்து 624 கோடி ரூபாயாகவும் இது வீழ்ச்சியடைந்தது.

கொரோனா முதல் அலை ஓய்ந்தபின், 2020 செப்., முதல் ஏற்றுமதி வர்த்தகம் மீண்டெழ துவங்கியது. இந்த நிதியாண்டின் (2021 - 22), ஏப்., மாதம் மட்டும், 9,661 கோடி ரூபாய் அளவுக்கு ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாகவே இருந்தது. ஆனால், கடந்த மே மாதம், வீச துவங்கிய கொரோனா இரண்டாவது அலை, தொழில் துறையினரின் நம்பிக்கையை பொய்க்க செய்தது.

ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துவருகிறது.கடந்த மே மாதம் இந்திய ஆடை ஏற்றுமதி, 8,109 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆடை ஏற்றுமதியில் பிரதானமாக உள்ள தமிழகத்தில், மே மாதம் முதல் இம்மாதம் 6ம் தேதி வரை நிறுவனங்கள் இயங்கவில்லை. தற்போதும், குறைந்த தொழிலாளருடனே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் மாதம், ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, பெரும் சரிவை சந்திக்கும் நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X