சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அரசியலில் இது சகஜம்!

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
அரசியலில் இது சகஜம்!'மக்களுக்கு நல்லது செய்கின்றனரோ, இல்லையோ... இப்படி வித்தியாசமாக யோசித்து, மக்களை குழப்புவதை மட்டும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்' என, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள். ஆந்திராவில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'நவரத்னலு' திட்டத்தை

 அக்கம் பக்கம்


அரசியலில் இது சகஜம்!



'மக்களுக்கு நல்லது செய்கின்றனரோ, இல்லையோ... இப்படி வித்தியாசமாக யோசித்து, மக்களை குழப்புவதை மட்டும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்' என, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள். ஆந்திராவில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'நவரத்னலு' திட்டத்தை நிறைவேற்றி, மக்களின் வாழ்க்கையை வளமாக்குவோம்' என, வாக்குறுதி அளித்தார் ஜெகன்மோகன் ரெட்டி.
நவரத்னலு திட்டம் எனக் கூறியதால், 'இலவசமாக தங்கம் கொடுக்கப் போகிறார் போலிருக்கிறது' என, அப்பாவி ஜனங்கள் நம்பி, அவரை முதல்வராக்கினர். ஆட்சி அமைத்து, கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஜெகன், இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் புரட்சி என, ஒன்பது விஷயங்களை அறிவித்து, அவற்றை படிப்படியாக நிறைவேற்ற போவதாக கூறினார் ஜெகன். ஆந்திர மக்களோ, 'நாம் தான் அதிகமாக ஆசைப்பட்டு விட்டோமா அல்லது அவர் நம்மை ஏமாற்றி விட்டாரா என தெரியவில்லை' என புலம்புகின்றனர். ஜெகன் கட்சியினரோ, 'வாக்காளர்களின் ஆசையை துாண்டினால் தான் ஓட்டு வாங்க முடியும். நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே' என, கிண்டலாக சிரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X