இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 18, 2021
Share
ஜூன் 19, 2020தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் 1933ல் பிறந்தவர், ஏ.எல்.ராகவன். 1947ல், கிருஷ்ண விஜயம் படத்தில் நடிகராக அறிமுகமானார். 1950ல் வெளியான விஜயகுமாரி படத்தில், பெண் குரலில் பாடி, பாடகராக அறிமுகமானார்.'எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, புத்திசிகாமணி பெத்தபுள்ள...' உள்ளிட்ட பல பாடல்கள், இவரின் பெயரை


இதே நாளில் அன்று


ஜூன் 19, 2020



தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் 1933ல் பிறந்தவர், ஏ.எல்.ராகவன். 1947ல், கிருஷ்ண விஜயம் படத்தில் நடிகராக அறிமுகமானார். 1950ல் வெளியான விஜயகுமாரி படத்தில், பெண் குரலில் பாடி, பாடகராக அறிமுகமானார்.'எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, புத்திசிகாமணி பெத்தபுள்ள...' உள்ளிட்ட பல பாடல்கள், இவரின் பெயரை பறைசாற்றும்.இசைக்குழுவை துவக்கி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பல கச்சேரிகள் நடத்தினார். பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுடன் இணைந்து, கல்லும் கனியாகும், கண்ணில் தெரியும் கதைகள் ஆகிய படங்களை தயாரித்தார். படங்களில் மட்டுமின்றி, 'டிவி' தொடர்களிலும் நடித்துள்ளார். இவரின் மனைவி, பிரபல நடிகை எம்.என்.ராஜம்.கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.எல்.ராகவன், 2020 ஜூன் 19ல், தன் 87வது வயதில் உயிரிழந்தார்.பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன், காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X