மூன்றாம் அலை ஏற்படலாம்; டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : 'டில்லியில் மக்கள் பொதுவெளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடக்கின்றனர்; இது, மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும்' என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.டில்லியில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.இதனால் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல், வணிக வளாகங்கள்
மூன்றாம் அலை ,டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி : 'டில்லியில் மக்கள் பொதுவெளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடக்கின்றனர்; இது, மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும்' என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டில்லியில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.இதனால் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில், மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.சமூக இடைவெளியை பின்பற்றாமல், மக்கள் கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது, டில்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது.'கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால், அது, மூன்றாம் அலையை துரிதப்படுத்தும்' என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்தது. தற்போது நிலவும் சூழல் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியது.பொதுவெளிகளில் விதிகளை மீறி நடப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19-ஜூன்-202112:41:42 IST Report Abuse
Sridhar தங்கள் வேலையை விட்டுவிட்டு டாக்டர்கள் மாதிரி கொரோனா வருமா வராதான்னு ஜோசியம் சொல்லிட்டு இருங்காங்க? இவங்களை தட்டிக்கேட்க ஆளே இல்லையா? ஏகப்பட்ட கேசு பெண்டிங் ல இருக்கும்போது அத கவனிக்காம, ஸ்கூல் பசங்க பரீட்சை நேரத்துல விளையாட போறமாதிரி பொறுப்பில்லாம பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
19-ஜூன்-202112:03:35 IST Report Abuse
Uthiran வாசகர்கள் டெல்லி நீதிமன்றத்தை இப்படி கழுவி ஊத்துவது அவர்களுக்கு காதில் கொஞ்சமாவது விழுகிறதா?
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
19-ஜூன்-202111:52:08 IST Report Abuse
தமிழன் இனி இந்தமாத கும்பமேளா எப்போ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X