பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.15 லட்சம் மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கிய எம்.எல்.ஏ.,

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சியில், நேற்று முன்கள பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, பேரூராட்சிக்கு தானமாக வழங்கினார். இது குறித்து, செயல் அலுவலர் ராஜசேகர் கூறியதாவது; ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட,

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சியில், நேற்று முன்கள பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, பேரூராட்சிக்கு தானமாக வழங்கினார். இது குறித்து, செயல் அலுவலர் ராஜசேகர் கூறியதாவது; ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, சின்னாக்கவுண்டம்பாளையத்தில் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, கழிப்பிடம் கட்டுவதற்காக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, 1,250 ச.அடி கொண்ட, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை பேரூராட்சிக்கு தானமாக வழங்கினார். இடத்திற்கான பத்திரத்தையும் வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X