மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பில் ஜோதிராதித்யா, வருணுக்கு வாய்ப்பு?| Dinamalar

மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பில் ஜோதிராதித்யா, வருணுக்கு வாய்ப்பு?

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (11) | |
புதுடில்லி :பா.ஜ., மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தியதை அடுத்து, எந்த நேரத்திலும் மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற யூகங்களும் களைகட்டத் துவங்கியுள்ளன. புதிய முகங்கள் பிரதமர்
Modi Cabinet reshuffle, Jyotiraditya Scindia, Varun Gandhi

புதுடில்லி :பா.ஜ., மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தியதை அடுத்து, எந்த நேரத்திலும் மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற யூகங்களும் களைகட்டத் துவங்கியுள்ளன.


புதிய முகங்கள்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2019 மே 30ல் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதில் 24 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் உட்பட, மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

லோக் ஜன சக்தி நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவை அடுத்து அந்த இடங்கள் காலியாகின. அகாலிதளம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, மேலும் இரு அமைச்சர் பதவிகள் காலியாகின.

மத்தியில், இரண்டாவது முறை ஆட்சி அமைந்ததில் இருந்து அமைச்சரவை விரிவாக்கம் நடக்கவில்லை. ஒரு அமைச்சர், பல துறைகளை கவனிக்க வேண்டிய பணிச்சுமை உள்ளது.ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில் துறையை கூடுதலாக கவனித்து வருகிறார். உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறையை கவனித்து வருகிறார்.


இதையடுத்து அமைச்சரவையை விஸ்தரிக்க ஆலோசனை நடந்தது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நடத்திய இரு ஆலோசனை கூட்டங்களிலும், அமைச்சர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பல புதிய முகங்களுக்கும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


பரிசீலனை


காங்கிரசில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறி பா.ஜ.,வில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா, திரிணமுல் காங்.,கில் இருந்து வெளியேறி பா.ஜ.,வில் இணைந்த தினேஷ் திரிவேதி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனவால், ஒடிசாவை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஸ்வினி பாய்ஸ்னப், மேனகாவின் மகன் வருண், லடாக் எம்.பி., ஜம்யங் ஷெரிங் நாம்ங்யால் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X