கொரோனா முற்றிலும் போகவில்லை: பிரதமர் எச்சரிக்கை

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி :''கொரோனா தொற்று, நம்மிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. இன்னும் நம்முடன் இருக்கிறது. உருமாற்றம் அடைவதற்கும் வாய்ப்புள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அவசர சிகிச்சைகொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை சாராத முன்களப் பணியாளர்களுக்கு, மத்திய திறன் மேம்பாடு மற்றும்
கொரோனா ,போகவில்லை , பிரதமர் , எச்சரிக்கை

புதுடில்லி :''கொரோனா தொற்று, நம்மிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. இன்னும் நம்முடன் இருக்கிறது. உருமாற்றம் அடைவதற்கும் வாய்ப்புள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.


அவசர சிகிச்சை



கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை சாராத முன்களப் பணியாளர்களுக்கு, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை அமைச்சகம் சார்பில், தனித்துவமான குறுகிய கால பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. 'பிரதமர் கவுசல் விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், 276 கோடி ரூபாய் செலவில், 26 மாநிலங்களில், 111 மையங்களில் இந்த சிறப்பு பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, தீவிர சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி, மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகிய ஆறு பிரிவுகளில், முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


புதிய சவால்




பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களால் இந்த பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுஉள்ளன. இதன் துவக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது; இதை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா இரண்டாவது அலையின் போது பல்வேறு புதிய சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிட்டது. கொரோனா தொற்று நம்மிடமிருந்து முற்றிலும் போகவில்லை. இன்னும் நம்மிடையே இருக்கிறது. உருமாற்றம் அடைவதற்கும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.


வேலை வாய்ப்பு



வருங்காலத்தில் கொரோனா போன்ற சவால்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த பயிற்சி வகுப்பு கள், 2 - 3 மாதங்கள் நடக்கும். இதன் வாயிலாக மருத்துவத் துறை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு புது வேகம் அளிக்கப்படும். இளைஞர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும்.நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் தான், புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகள் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லுாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் கிராமப்புற சிகிச்சை மையங்களில் பணியாற்றும் இதர பணியாளர்களின் சேவை பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஜூன்-202107:36:02 IST Report Abuse
g.s,rajan அது சரி மொதோ லாக் டவுன் போட்டது எது தடை உத்தரவு எதுக்கு ,வங்கிகளை தனியார் மயமாக்க ,ரயில்வே துறையை ஒழிச்சுக்கட்ட ,அரசாங்க ஊழியர்களை பழி வாங்க ,அவர்களின் பஞ்சப்படியை சம்பளத்தை குறைக்க என கொரோனாவை வைத்து மோடிஜி போட்ட திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றினார் ,ஏனெனென்றால் நூற்றி நாற்பத்தி நான்கு தடை உத்தரவு இருப்பதால் எவரும் அரசாங்கத்தை எதிர்த்து போராட முடியாது ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என தங்களின் எதிர்ப்பைக் காட்ட முடியாது .கொரோனா பரவும் நேரத்தில் அதனைத் தடுக்க முயற்சி செய்யாமல் அதில் கவனம் செலுத்தாமல் மற்றவற்றை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ???.அரசாங்க ஊழியர்களின் பஞ்சப்படியை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஜூன்-202107:24:35 IST Report Abuse
g.s,rajan கொரோனா மேல பழி போட்டு வங்கித் துறை ,ரயில்வே துறை ,பிஎஸ்என்எல் ,ஆயுள் காப்பீட்டுத் துறை ,இதர காப்பீட்டு நிறுவனங்கள் என எல்லாத்தையும் ஊத்தி மூடியாச்சு .எல்லாத்தையும் நாசமாக்கி ஒழிச்சுக்கட்டியாச்சு மோடிஜிக்கு கொரோனா ஒரு கவசம் மாதிரி .தேவையே இல்லாமல் கொரோனா ஒன்னு அலையின் பொது நூற்று நாற்பத்தி நாலு தடை உத்தரவு போட்டு எல்லாத்தையும் உருப்படி இல்லாம பண்ணியாச்சு .வேண்டுமென்றே சாமானியனின் பொருளாதாரத்தை சீரழித்து அம்பானி அதானி தவிர எல்லாமாபெரும் கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் கோடிரூபாய்களை ரிசர்வ் வங்கியின் அவசரகால நிதி ஒரு லட்சத்தி என்பதை ஆறாயிரம் கோடி ரூபாய்கள் சும்மாவே இருக்கிறது என்று கூறி அதை எடுத்து தாரை வார்த்தாச்சு ,அந்த அவசர கால நிதியை கோடீஸ்வரர்களுக்கு அல்லி அல்லி கொடுத்து வாராக்கடன் வரிசையில் வைத்து தள்ளுபடி செஞ்சாச்சு ,ஆனால் சாமானியன் கடன் வாங்கினால் அதைக் கட்டியே ஆகணும் என்று வங்கிகள் நிர்பந்திக்கின்றன ,சாதாரண மக்கள் ,நடுத்தர மக்கள் வாங்கிய கடனை கட்டாமல் தப்பவே முடியாது,தள்ளுபடியும் கிடையாது ,நேர்மையான முறையில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கடனைக்கட்ட அரசாங்கம் கழுத்தை நெரிக்குது. தயவு தாட்சண்யம் இல்லாமல் இதர வரிகளைக் கட்ட குரல்வளையை நெருக்குது .வருமானமே இல்லாமல் எப்படி கடனைக் கட்டுவது ??அசலையும் வட்டியையும் கட்டுவது ???அரசாங்கம் என்ன சலுகைகளை சாதாரண மக்களுக்கு செய்யுது ???ஒன்றும் இல்லை அரசாங்கம் யாருக்கு பணக்காரர்களுக்கா ??இல்லை சாமானிய மக்களுக்கா ??புரியவில்லை , ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
19-ஜூன்-202120:00:32 IST Report Abuse
sahayadhas அப முன்றாவது அலைக்கும் அமெரிக்கா மற்றும் twitter அள்ளி தரும். ஜெய் ௵ராம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X