கொரோனா முற்றிலும் போகவில்லை: பிரதமர் எச்சரிக்கை| Dinamalar

கொரோனா முற்றிலும் போகவில்லை: பிரதமர் எச்சரிக்கை

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி :''கொரோனா தொற்று, நம்மிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. இன்னும் நம்முடன் இருக்கிறது. உருமாற்றம் அடைவதற்கும் வாய்ப்புள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அவசர சிகிச்சைகொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை சாராத முன்களப் பணியாளர்களுக்கு, மத்திய திறன் மேம்பாடு மற்றும்
கொரோனா ,போகவில்லை , பிரதமர் , எச்சரிக்கை

புதுடில்லி :''கொரோனா தொற்று, நம்மிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. இன்னும் நம்முடன் இருக்கிறது. உருமாற்றம் அடைவதற்கும் வாய்ப்புள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.


அவசர சிகிச்சை



கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை சாராத முன்களப் பணியாளர்களுக்கு, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை அமைச்சகம் சார்பில், தனித்துவமான குறுகிய கால பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. 'பிரதமர் கவுசல் விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், 276 கோடி ரூபாய் செலவில், 26 மாநிலங்களில், 111 மையங்களில் இந்த சிறப்பு பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, தீவிர சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி, மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகிய ஆறு பிரிவுகளில், முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


புதிய சவால்




பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களால் இந்த பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுஉள்ளன. இதன் துவக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது; இதை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா இரண்டாவது அலையின் போது பல்வேறு புதிய சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிட்டது. கொரோனா தொற்று நம்மிடமிருந்து முற்றிலும் போகவில்லை. இன்னும் நம்மிடையே இருக்கிறது. உருமாற்றம் அடைவதற்கும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.


வேலை வாய்ப்பு



வருங்காலத்தில் கொரோனா போன்ற சவால்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த பயிற்சி வகுப்பு கள், 2 - 3 மாதங்கள் நடக்கும். இதன் வாயிலாக மருத்துவத் துறை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு புது வேகம் அளிக்கப்படும். இளைஞர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும்.நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் தான், புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகள் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லுாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் கிராமப்புற சிகிச்சை மையங்களில் பணியாற்றும் இதர பணியாளர்களின் சேவை பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X