டில்லி கலவர வழக்கில் ஐகோர்ட் கருத்து: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி :'டில்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு 'ஜாமின்' வழங்கிய டில்லி உயர் நீதிமன்றம், சட்ட விரோதநடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி தெரிவித்த கருத்துகள் கவலையளிக்கின்றன. டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை வேறு எந்த நீதிமன்றத்திலும், யாரும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் கருத்து,உச்ச நீதிமன்றம் , அதிருப்தி, கலவர வழக்கு , உத்தரவு

புதுடில்லி :'டில்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு 'ஜாமின்' வழங்கிய டில்லி உயர் நீதிமன்றம், சட்ட விரோதநடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி தெரிவித்த கருத்துகள் கவலையளிக்கின்றன. டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை வேறு எந்த நீதிமன்றத்திலும், யாரும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டில்லியில் கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.இது தொடர்பாக டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியர் நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


சட்டவிரோதம்மூவர் மீதும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மூவருக்கும் டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. ஆனால் இரண்டு நாட்களாகியும் மூவரும் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து மூவரும் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, டில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'மூவரும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் அடையாள சான்றுகளை முழுமையாக திரட்ட முடியவில்லை.

'எனவே, அவர்களை இப்போது விடுதலை செய்யக் கூடாது' என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: ஜாமின் வழங்கிய பின், சிறையில் ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்களுக்கு போராட்டம் நடத்தும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

போராட்டத்துக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இடையே, நுாலிழை அளவு தான் வித்தியாசம் உள்ளது. சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம் என்பது பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது.சாதாரண குற்றச் செயல்களுக்கு இந்த சட்டத்தை பயன்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல. டில்லியில் கலவரம் ஓய்ந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதனால் மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மூவருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் டில்லி போலீசார் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. டில்லி போலீசார் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:மூவருக்கும் ஜாமின் வழங்கியுள்ள டில்லி உயர் நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் தேவையற்றவை. அந்த சட்ட நடைமுறையையே, அந்த கருத்துக்கள் தலைகீழாக புரட்டி போட்டுள்ளன.
தனி விசாரணைஅமெரிக்க அதிபர் வந்திருந்தபோது, நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கில், டில்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் இறந்தனர். கலவரம் ஓய்ந்துவிட்டது என்பதால் அவர்கள் செய்த தவறுகளை மறுக்க முடியாது. இந்த கருத்துகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால், அது, நாடு முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குண்டு வைத்தவர் கூட, அது வெடிக்கவில்லை என கூறி ஜாமின் பெற்றுவிட முடியும். போராட்டம் நடத்த அளிக்கப்பட்ட உரிமையில் மற்றவர்களை கொல்லவும், வன்முறையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை வைத்து பயங்கரவாத வழக்குகளில் பலரும் ஜாமின் பெற்று விட முடியும். ஜாமின் வழக்கில் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் பற்றி கருத்து கூற தேவையில்லை. அதனால் இது குறித்து டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், ''ஜாமின் வழக்கு பற்றி தான் இப்போது விசாரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சட்டம் குறித்து டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் பற்றி, உச்ச நீதிமன்றம் தனியாக விசாரிக்க வேண்டும்,'' என்றார்.


ஒத்திவைப்புஇதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: டில்லி கலவர வழக்கில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு தடை விதிக்க இப்போது எந்த அவசியமும் இல்லை என கருதுகிறோம். எனினும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு மூவருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. ஜாமின் வழங்குவதற்கான உத்தரவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி, டில்லி உயர் நீதிமன்றம் அதிக அளவு கருத்து தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது.இந்த கருத்துகள் நாடு முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை எந்த நீதிமன்றத்திலும், எந்த வழக்கிலும் முன்னுதாரணமாக மனுதாரர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
டில்லி உயர் நீதிமன்றம்தெரிவித்த கருத்துகள் பற்றி விரிவாக விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
19-ஜூன்-202117:07:58 IST Report Abuse
K. V. Ramani Rockfort தேச நலனில் அக்கறையில்லாமல் அந்த மூன்று குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்ய உத்தரவிட்டு, மேலும் அந்த குற்றவாளிகளின் ஜாமீனை தடை செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-202116:18:53 IST Report Abuse
Sriram V Chinese communist Mafia infiltrated judiciary. SC needs to be more careful in ing judges
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஜூன்-202116:09:25 IST Report Abuse
r.sundaram உயர்நீதிமன்ற நீதிபதிகளே இப்படி உச்சநீதிமன்றம் கண்டிக்கும் அளவில் கருத்துக்களை வெளியிட்டால், நீதி பரிபாலனம் என்னவாகும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X