அரசியல் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு மதிப்பெண் ஓ.பி.எஸ்., வலியுறுத்தல்

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை :'பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'தேர்ச்சி' என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என அறிவித்திருப்பது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சியை அளித்து உள்ளது. பத்தாம் வகுப்பு
 10ம் வகுப்பு, மதிப்பெண் ,ஓ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை :'பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'தேர்ச்சி' என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என அறிவித்திருப்பது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சியை அளித்து உள்ளது. பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதில்சிக்கலை ஏற்படுத்துமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, முதல்வர் தலையிட்டு, பத்தாம் வகுப்பு சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.மற்றொரு அறிக்கையில், 'புதுக்கோட்டை மாவட்டம் வடத்தெரு பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும். 'கடலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில் புதிதாக 15 கிணறுகளை அமைக்க, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையத்திற்கு அனுமதிதரக்கூடாது' என, அவர் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
20-ஜூன்-202100:31:49 IST Report Abuse
Raj அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202113:59:48 IST Report Abuse
HONDA உன் ஆட்சியில் பணாம விட்டுட்டு இப்ப பண்ணுண்ணா எப்படி எப்பபபண்ணணுமோ அப்ப பண்ணுவாங்க.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
19-ஜூன்-202112:08:34 IST Report Abuse
Srinivas.... ஓபீசு...உன்னையதான் தனியா ஒத்துக்கிட்டானே அடிபொடி....நீ தனியா கூவி என்ன ஆகப்போகுது?
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஜூன்-202114:43:49 IST Report Abuse
Dhurveshஇவன் எந்த காலத்தில் இருக்கிறான் தெரியல இப்போ எங்கே 10 வது வகுப்பு மார்க் வைத்து வேலை , மோடி வந்து 45 வருடம் இல்லாத அளவுக்கு வேலைவிப்பிள்ளை அப்புறம் என்ன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X