சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'யு டியூபர்' ஆபாச மதன் கைது: 'ஆடி'கார்கள், ரூ.1 கோடி சிக்கியது

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (13+ 28)
Share
Advertisement
தர்மபுரி : தர்மபுரி அருகே, தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த, 'பப்ஜி' மதனை, சென்னை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மதன், 29; இவரது மனைவி கிருத்திகா, 25. இருவரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள். இவர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட, 'யு டியூப்' சேனல்களை நடத்தி வருகின்றனர்.அவற்றில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, 'பப்ஜி' ஆன்லைன் விளையாட்டுக்கான
யு டியூபர் ஆபாச மதன் ,கைது ஆடி , ரூ.1 கோடி சிக்கியது

தர்மபுரி : தர்மபுரி அருகே, தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த, 'பப்ஜி' மதனை, சென்னை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மதன், 29; இவரது மனைவி கிருத்திகா, 25. இருவரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள். இவர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட, 'யு டியூப்' சேனல்களை நடத்தி
வருகின்றனர்.

அவற்றில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, 'பப்ஜி' ஆன்லைன் விளையாட்டுக்கான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.அதிலுள்ள, கதாபாத்திரங்களுக்கு மதன் பின்னணி குரல் கொடுப்பார். எதிர் முனையில் விளையாடும் நபரும் குரலை பதிவு செய்வார்.
அப்போது, மதன் பேசும் வார்த்தைகள் மிகவும் ஆபாசமாக இருக்கும். பெண்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி, அருவருக்கத்தக்க வகையில் பேசுவார்.இவர்களது சேனல்களுக்கு, எட்டு லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். இவர்களில் 30 சதவீதம் பேர் சிறுவர், சிறுமியர். இவர்களின் பாலுணர்வை துாண்டும் வகையில், வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அதனால், பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 200க்கும் மேற்பட்டோர், சென்னை போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, கிருத்திகாவை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம், அவரது குழந்தையும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

'குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆவதற்காவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, ஆபாச பேச்சு அடங்கிய வீடியோக்களை, யு டியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்தோம்' என, போலீசாரிடம் கிருத்திகா கூறியுள்ளார்.

மேலும், கணவர் மதன், புதிய மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி வருகிறார். தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி தலைமறைவாக உள்ளார். தர்மபுரியில் பதுங்கி உள்ளார் என்றும், கிருத்திகா தெரிவித்தார்.இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார், தர்மபுரி சென்று, குண்டல்பட்டி என்ற இடத்தில், தனியார் விடுதியில் பதுங்கி இருந்த மதனை நேற்று அதிகாலை கைது செய்தனர். அவருக்கு, அறை கிடைக்க உதவிய பார்த்திபன் என்பவரையும் பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதன் மற்றும் கிருத்திகாவிடம் இருந்து, ஆபாச பேச்சு அடங்கிய வீடியோக்கள், இரண்டு ஆடி கார், ட்ரோன், கணினி, மடிக்கணினி, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாயுடன், இரண்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.தன்னிடம் சிக்கிய பெண்களிடம், மதன் பல லட்சம் ரூபாய் சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில், தலைமறைவாக இருந்த 'யு டியூபர்' மதன், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisement
வாசகர் கருத்து (13+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
22-ஜூன்-202117:23:18 IST Report Abuse
spr "இவர்களது சேனல்களுக்கு, எட்டு லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர்" இவர்களுக்குத் தெரியாததா தாங்கள் செய்வது தவறு என்று ? குற்றம் புரிபவருக்குத் துணையாக இருப்போர் மற்றும் தூண்டுதலாக இருப்போராலேதான் குற்றங்கள் அதிகரிக்கிறது இவர்களுக்கு ஆதரவு தருபவர்களுக்கு இக்குற்றத்திற்கு உடந்தை பணம் வரும்வழியை உருவாக்கிக் கொடுத்த 'யூடியூப்' நிறுவனமும் ஒரு காரணம் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு உதவியவர்கள் ஆதரவு தருபவர்கள் பங்கேற்றவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
25-ஜூன்-202111:35:59 IST Report Abuse
gayathriஎட்டு லட்சம் அல்ல பதினைந்து லட்சம் என்று ஊடகத்தில் செய்தி வந்ததே...
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
21-ஜூன்-202112:13:10 IST Report Abuse
S.P. Barucha கீழ்த்தரமான செயல்களில்தான் வருமானம் அதிகம், அப்படியென்றால் சமுதாயத்தில் எவ்வளவு கீழ்த்தரமான மக்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
19-ஜூன்-202123:13:36 IST Report Abuse
kulandhai Kannan இந்த வாசகர் பகுதியில், நேற்று ஒரு பிரகஸ்பதி, இந்த மதன் ஒரு முற்பட்ட வகுப்பினர் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். ஆனால் நிஜம் வேறாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X