'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை நடத்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்காக, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வும், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. பிப்ரவரி, மார்ச்சில் ஜே.இ.இ., தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மீதியுள்ள இரண்டு கட்ட ஜே.இ.இ., தேர்வுகளும், நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தேர்வுகளை நடத்துவது பற்றி, மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீட் மற்றும் மீதியுள்ள ஜே.இ.இ., தேர்வுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பற்றி முடிவெடுக்கப்படும். தேதி முடிவு செய்யப்பட்டதும், நீட் தேர்வுகான பதிவும் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE