அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோனியாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
முதல்வர் ஸ்டாலின், தன் மனைவியுடன் சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து நலம் விசாரித்தார். இரண்டு நாள் பயணமாக டில்லி வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, தமிழக நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். நேற்று காலையில், புதிய தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பிய முதல்வர், கவுடில்யா
சோனியா, நலம் விசாரித்த ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், தன் மனைவியுடன் சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
இரண்டு நாள் பயணமாக டில்லி வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, தமிழக நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். நேற்று காலையில், புதிய தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பிய முதல்வர், கவுடில்யா சாலையில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லம் சென்றார்.

அங்குள்ள கட்டடம் மிகவும் பழமையானது என்பதால், அதை படிப்படியாக இடித்து விட்டு, அதே இடத்தில் கூடுதல் வசதிகளுடன் பிரமாண்டமான கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. அந்த பணிகளை பார்வையிட்ட முதல்வர், சில அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க விரைந்தார்.

ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்திற்கு, மனைவி துர்காவுடன் ஸ்டாலின் சென்றார். அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த ராகுலுடன் சேர்ந்து, முதல்வரை சோனியா வரவேற்றார்.

தேர்தல் வெற்றிக்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது மனைவி துர்காவிடமும், சோனியாவும், ராகுலும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பதிலுக்கு, சோனியாவின் உடல் நலம் குறித்து அக்கறையுடன் துர்கா விசாரிக்கவே, நெகிழ்ச்சியான சந்திப்பாக அது மாறியது. முதல்வருடன் சோனியாவும், ராகுலும், சில நிமிடங்கள் பேசினர். இதன்பின், டில்லி விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், தன் இரண்டு நாள் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார்.

முதல்வரின் டில்லி பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மட்டுமே முக்கியத்துவம் நிறைந்ததாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின், தன் டில்லி பயணத்தின் போது, மத்திய அமைச்சர்கள் யாரையும் சந்திக்கவில்லை.


'சிந்துவெளியில் இருந்து வைகைக்கு' சோனியாவுக்கு ஸ்டாலின் அளித்த பரிசு
சோனியாவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது, 'ஜர்னி ஆப் எ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை' என்ற நுாலை பரிசளித்தார். அது, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த நுாலை எழுதியவர் தமிழரும், தமிழில் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்., அதிகாரியானவருமான ஆர்.பாலகிருஷ்ணன். அவர், சிந்துவெளி ஆய்வுகள், இடப்பெயராய்வுகளை செய்து, பல நுால்களை எழுதியவர். ஒடிசா மாநில தலைமை செயலராக திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் எழுதிய 'சிந்துவெளி முதல் வைகை வரையிலான ஒரு நாகரிகத்தின் பயணம்' என்ற அர்த்தத்தில் உள்ள இந்த நுாலில், சிந்துவெளி பண்பாடு முடிவுக்கும், தமிழ் பண்பாட்டின் தொடக்கத்துக்கும் உள்ள தொடர்பை, சங்க இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகளின் வழியாக விளக்கியுள்ளார்.

அதாவது, சிந்துவெளியில் உள்ள ஒட்டகம், கவரிமான் உள்ளிட்டவை தமிழகத்தில் இல்லாவிட்டாலும், நம் சங்க இலக்கியங்களில் அவை பாடப்பட்டுள்ளன; அங்குள்ள இடங்களான கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய ஊர்கள், தமிழகத்திலும் உள்ளன.

அங்குள்ள காளையுடன் மோதும் விளையாட்டுக்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமே, இன்றும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது; கீழடி உள்ளிட்ட வைகைக் கரை அகழாய்வுகளில் சிந்துவெளியுடன் தொடர்புடைய தொல்பொருட்கள் கிடைத்திருப்பது உள்ளிட்ட சான்றுகளின் வழியாக இதை நிறுவும் நுால்.

இந்த நுாலை, சோனியாவுக்கு பரிசளித்தது, தமிழர்களின் தொன்மையையும், பண்பாட்டையும் நினைவுகூரும் மிக முக்கிய நுாலாக உள்ளது என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-202119:28:29 IST Report Abuse
Pugazh V அவர்கள் எந்த மொழியில் பேசினா... ஒனக்கென்னப்பூ...? வயிறு எரியுதோ?? மோரைக் குடி..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-202119:27:34 IST Report Abuse
Pugazh V பாஜக அதிமுக வினரின் காரணமற்ற நாகரிகமற்ற புலம்பல்களும் கதறல்களும் சிறப்பு சிறப்பு. படிக்க் படிக்கப் பேரானந்தம். ஸ
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
19-ஜூன்-202115:24:05 IST Report Abuse
Kumar வட இந்தியாவில் இருப்பவர்கள் ஆரியர்கள் இல்லையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு சொந்த நாடு எது? தமிழ் இலக்கியங்களில் எங்கே திராவிடம்,ஆரியம் என்று உள்ளது?. திருக்குறளில் இருக்கிறதா?சிலப்பதிகாரத்தில் இருக்கிறதா? இல்லை கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா? அதனால் தான் இந்த மூன்று நூல்களையும் மிக மோசமாக திட்டினார் இங்கே ஆரிய,திராவிட பிரிவினைவாதத்தை தோற்றுவித்த ஒருவர்.கார்டுவெல் கூறிய பொய் பிரச்சாரம் மதமாற்றிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X