பொது செய்தி

இந்தியா

ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடும் என தெரிகிறது.பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை கடும் நஷ்டங்களை சந்தித்ததை அடுத்து, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டது.இதற்காக, கடந்த 2020 -- 2021

புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடும் என தெரிகிறது.



latest tamil news



பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை கடும் நஷ்டங்களை சந்தித்ததை அடுத்து, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டது.இதற்காக, கடந்த 2020 -- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 37 ஆயிரத்து 268 கோடி ரூபாய், விருப்ப ஓய்வு திட்டத்துக்காக ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 50 சதவீதம் பேரும், எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் 80 சதவீதம் பேரும் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து, 93 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பொருத்தமானவர்களாக ஏற்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், தற்போது இந்நிறுவனங்களில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.இதையடுத்து, தொலைதொடர்பு அமைச்சகம், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பொருத்தமான ஊழியர்களை, மீண்டும் ஆலோசகர்கள் பெயரில் பணியமர்த்த முடியுமா என, குறிப்பிட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
19-ஜூன்-202116:37:53 IST Report Abuse
seshadri இவர்களை வேலைக்கு மீண்டும் எடுப்பதை விட இளம் பொறியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களது வேலை இல்லா திண்டாட்டமும் தீரும் மற்றும் இந்த வயதானவர்கள் திரும்ப வந்தாலும் ஒன்றும் கிழித்து விட போவதில்லை அப்படி இருந்தால் முதலிலேயே செய்திருப்பார்கள் நிறுவனமும் நஷ்ட பட்டு இருக்காது. நான் அந்த அலுவலகத்திற்கு சென்று இருக்கிரென் ஜாலியாக உட்கார்ந்திருப்பார்கள் வேலை ஒன்றும் ஒழுங்காக நடக்காது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
19-ஜூன்-202112:09:55 IST Report Abuse
sahayadhas அபோ அம்பானி அவுட்டா,
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
19-ஜூன்-202112:09:14 IST Report Abuse
sahayadhas ஆஹா சந்தோசம் ,மறுபடியும் வயதானவர்களுக்கு free incomig மோடி வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X