இது உங்கள் இடம் : எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (101) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :மா.ரவீந்திரகுமார், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கான முயற்சியை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது சரியா, தவறா என்பது குறித்து, 2006 ஜூன் 7ல் வெளியான, 'துக்ளக்' இதழில், சோ எழுதிய தலையங்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று: கோவில்களில் இது போன்ற

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
மா.ரவீந்திரகுமார், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கான முயற்சியை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது சரியா, தவறா என்பது குறித்து, 2006 ஜூன் 7ல் வெளியான, 'துக்ளக்' இதழில், சோ எழுதிய தலையங்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று: கோவில்களில் இது போன்ற மாற்றங்களை செய்ய, ஒரு மதச்சார்பற்ற அரசு முனைவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகமத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனில் மத தலைவர்கள், ஆச்சார்யர்கள் போன்றோரால் எடுத்துக் கூறப்பட்டு, ஆத்திக சமூகம் ஏற்ற பின், மாற்றங்கள் செய்யலாம்.latest tamil newsபிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற எண்ணம் தவறானது. ஆகம விதிப்படியான கோவில்களில் பிராமணர் அர்ச்சகராக முடியாது; கர்ப்பகிரஹத்தினுள் நுழைய முடியாது; விக்ரஹத்தை தீண்டவும் முடியாது. அப்படி நடந்தால், அது ஆகம விதிமுறை மீறல். சிவாச்சார்யார் என்ற பரம்பரையில் வந்தவர் மட்டுமே, அர்ச்சகராக முடியும்; இது ஆகம விதி. வைணவ கோவில்களில், இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று,- வைகானச முறையை பின்பற்றுகிற கோவில்கள்; மற்றொன்று, பாஞ்சராத்ர முறையை பின்பற்றுபவை. வைகானச முறை கோவில்களில், வைகானச பிரிவினர் தான் அர்ச்சகர் ஆக முடியும். இவர்கள், 'பட்டாச்சாரியர்' என, அழைக்கப்படுகின்றனர். பாஞ்சராத்ர முறை கோவில்களில், ஆகமம் மூன்று நிலைகளைஉடையது.
அதில் மூன்றாவது நிலையில், எந்த பிரிவினர் வேண்டுமானாலும் தகுதி பெற்று, பூஜை செய்யலாம்; முதல் இரண்டு நிலைகளில் முடியாது. வேறு சில வழிகளை பின்பற்றும் கோவில்களும் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பதஞ்சலி பூஜாஸூத்ரம் விதிக்கும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன; அங்கு தீட்சிதர் தவிர வேறு யாரும் கர்ப்பகிரஹத்தினுள் போக முடியாது; மத குருவாக இருந்தாலும் அனுமதி கிடையாது. மேல்மலையனுார் கோவிலில் பிராமணரல்லாத பர்வத ராஜ குலத்தினர் தான் அர்ச்சகர்கள்; மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. ஆகம விதிப்படி பூஜை நடத்தப்படும் கோவில்களில், சிவாச்சார்யார்களே அர்ச்சகராக முடியும்; மற்றவர்கள் யாராவது, கர்ப்பகிரஹத்தினுள் நுழைந்தால் கூட, புனிதம் கெடும்; பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

அர்ச்சகர் பெற்றிருக்கிற உரிமை, பரார்த்த பூஜை; அதாவது பிறருக்காக செய்கிற பூஜை. இதை செய்ய சிவாச்சார்யார் தவிர, வேறு எவருக்கும், அவர் எவ்வளவு உயர்ந்த கல்வி, வேத ஞானம், பக்தி எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் சரி,- உரிமை கிடையாது; இது ஆகம விதி. சிவாச்சார்யார் குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது... வேதம், ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல்; ஆசாரங்களை கடைப்பிடித்தல்; தீட்சை பெற்றிருத்தல் உட்பட பல தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்; அப்படிப்பட்டோர் தான் அர்ச்சகர் ஆக முடியும். இவ்வாறு சோ குறிப்பிட்டுள்ளார். எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது, ஆகம விதிகளுக்கு புறம்பானது என்பது நிச்சயம். ஆகம விதிப்படி பிரதிஷ்டை நடந்து, அதன்படி வழிபாடு நடக்கிற கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானிக்கப்பட்டால், அது ஆகம விரோதமே!


latest tamil newsஆகம விதிப்படி அல்லாமல், பிரதிஷ்டை நடந்து, பூஜை நடக்கிற கோவில்கள் பல உண்டு. அவற்றில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது, ஆகம விரோதம் அல்ல. நாட்டில், சிதிலமடைந்த ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அவற்றை சரி செய்வது தான், இப்போது மிக முக்கியம். நாட்டில் இன்னும் முக்கிய பிரச்னைகள் ஏராளம் இருக்கின்றன. அதை விடுத்து, நாத்திக கூட்டத்தினர் கோவில் பக்கம் மூக்கை நுழைக்காமல் இருப்பதே, நாட்டுக்கு நல்லது.


Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
21-ஜூன்-202116:11:04 IST Report Abuse
KUMAR. S பசு மடம்னு ஒன்னு இருக்கு..பசுதான் இருக்கணும்..அந்த மடத்துல பன்றி, எருமை எல்லாம் வந்து சேர்ந்தா அந்த மடம் என்னவாகும்
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-202104:58:05 IST Report Abuse
SexyGuy . There is only one power in this universe, and call it in different names. Even god is word given us. So lord siva, vishnu or ganesh all are man made. Like that we d agamams. In the name of God or Agamam you can divide and take advantage of people, Let us treat fellow human being as equal and give them the respect they deserve. This is what any God would want. Live and let others live.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
19-ஜூன்-202123:11:22 IST Report Abuse
தத்வமசி திமுக திகவின் சரித்திரம் தெரிந்து தானே ஓட்டு போடாதீர்கள் என்று மன்றாடினார்கள். கேட்டார்களா..? நெற்றியில் பட்டை, வாயில் தெய்வத்தின் பெயர்கள், ஆயிரம் ஆயிரம் பிரார்த்தனைகள், பரிகாரங்கள், தானதர்மங்கள். கடைசியில் சம்பாதிக்க வேண்டும் என்று இவர்களுக்கு ஓட்டு போட்டார்கள் அல்லவா?... தமிழகம் தரம் தாழ்ந்து இந்து / பிராமண ஜெனோசைட் என்று சொல்லக்கூடிய நிலைமையில் கொண்டு தள்ளியது யார் ? ஆன்மிகம் பேசும் மக்கள் ஏன் ஓட்டு போட்டார்கள் ? நெல்லிக்காய் மூட்டை போல இருப்பதால் தான் முகலாயர்கள் முதல் இன்றைய நாத்திக அரசு வரை நம்மை ஆள்கிறது. தலையில் தானே தீயை வைத்துக்கொண்டு கத்தினால் கதறினால் எவனும் காப்பாற்ற முடியாது. தங்களை இப்படி செய்தால் சிறுபான்மையினர் ஓட்டு போடுவார்களா ? இல்லை போட்டார்களா ? கட்சியில் இருந்தால், உறவுக்காரன் தேர்தலில் நின்றால் அவனுக்குத்தான் ஓட்டு போடவேண்டுமா ? யார் பக்கம் நிற்கிறான் என்று பார்க்க வேண்டாமா ? ஏன் ஆன்மிகம் பேசுபவர்கள் திமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் ஓட்டு போட்டீர்கள் ? செய்வதை செய்து விட்டு கோவிலில் தானே பரிகாரம் தேட போய் நிற்கப் போகிறீர்கள் ? அந்த தெய்வம் மன்னிக்குமா ?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
20-ஜூன்-202120:36:31 IST Report Abuse
தமிழ்வேள்தன்வினை தன்னை சுடும் ..முட்டாள்தனம் தெரிந்தே செய்தால் அனுபவிக்கவேண்டியதுதான் ..எந்த தெய்வத்தாலும் காப்பாற்ற இயலாது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X