இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021
Share
தமிழக நிகழ்வுகள்1. மரச்சட்டத்தால் அடித்துக்கொலைசாயல்குடி : சாயல்குடி மாதவன் நகரைச் சேர்ந்தவர் வீரன், 60.இவர் சாயல்குடி பேரூராட்சியில் துாய்மைப்பணியாளராக பணி செய்து, கடந்தாண்டு ஓய்வு பெற்றார்.கக்கன் பூங்காபகுதியில் நடந்து செல்லும் போது, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் கண்ணன் 32. வீரனை வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.வாக்கு வாதம் ஏற்பட்டதால் அருகே

தமிழக நிகழ்வுகள்
1. மரச்சட்டத்தால் அடித்துக்கொலை
சாயல்குடி : சாயல்குடி மாதவன் நகரைச் சேர்ந்தவர் வீரன், 60.இவர் சாயல்குடி பேரூராட்சியில் துாய்மைப்பணியாளராக பணி செய்து, கடந்தாண்டு ஓய்வு பெற்றார்.
கக்கன் பூங்காபகுதியில் நடந்து செல்லும் போது, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் கண்ணன் 32. வீரனை வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.வாக்கு வாதம் ஏற்பட்டதால் அருகே கிடந்த பனைமரச்சட்டத்தால் வீரனின் தலையில் அடித்ததில் காயம் அடைந்தார். துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். வீரனை கொலை செய்த, சுரேஷ்கண்ணனை கைது செய்தார்.latest tamil news2. உச்சிப்புளி அருகே மூவர் கைது
உச்சிப்புளி : உச்சிப்புளி அருகே கஞ்சா மற்றும் கத்தியுடன் மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உச்சிப்புளி எஸ்.ஐ., முருகானந்தன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு நாகாச்சி சிப்காட் பகுதியில் ரோந்து சென்றனர்.சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாகாச்சி வெள்ளமாசி வலசை முருகேசன் மகன் மாயகிருஷ்ணன் 25, முனியசாமி மகன் தீபக் 22, களஞ்சியம் மகன் கமலேஸ்குமார் 21, ஆகிய மூவரிடம் விசாரித்தனர்.அவர்கள் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கத்தி ஒன்றை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.

3. டாக்டர் வங்கி கணக்கில் ரூ.11 லட்சம் 'அபேஸ்'திருச்சி:டாக்டர் வங்கிக் கணக்கில் இருந்து, 11 லட்சம் ரூபாயை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் டாக்டர் ரெங்கநாதன், 84. இவரை சில நாட்களுக்கு முன் தொடர்பு கொண்ட ஒருவர், வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். டாக்டரும் அதை நம்பி, அவர்கள் கேட்ட வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.,யை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வங்கிக் கணக்கில் இருந்து, 10.61 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. பதறிய அவர், வங்கியில் விசாரித்தபோது, 'ஆன்லைன்' மூலம் பணம் எடுக்கப்பட்ட விபரம் தெரிந்தது. டாக்டர் ரெங்கநாதன் நேற்று முன்தினம், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆன்லைனில் பணம் திருடியவர்களை தேடி வருகின்றனர்.


latest tamil news
4. கொத்தனார் கொலை நான்கு பேர் கைது
மரக்காணம்: பெண் தர மறுத்த கொத்தனார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த சின்ன கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 31; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், முந்திரி தோப்பில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.கோட்டக்குப்பம் போலீசார் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நள்ளிரவில் அவர் உயிர்இழந்தார்.

போலீசார் கூறியதாவது:செல்வகுமாரின் நண்பர் குப்புசாமி, 26. செல்வகுமார் மனைவியின் தங்கை உஷாவை, திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளார். அவருக்கு பெண் தர செல்வகுமார் மறுத்தார். உஷாவிற்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்து உள்ளார். இதனால், செல்வகுமார் மீது குப்புசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, செல்வகுமாரை மது அருந்துவதற்கு முந்திரி தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, செல்வகுமார் தலையில் கல்லை போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் மயங்கியதால், அவர் இறந்து விட்டதாக கருதி, நால்வரும் தப்பி சென்றனர்.செல்வகுமாரின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், குப்புசாமி உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news5. இரு பிரிவினர் மோதல்; ஐந்து பேர் கைது
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேரை போலீசார் கைது செய்து.சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி மகன் சதீஷ், 25; ராஜேந்திரன் மகன் அஜீத், 23; இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் சங்கராபுரத்தில் இருந்து சேஷசமுத்திரம் சென்றனர்.சேஷசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து மகன் உதயசூரியன், 23; மணிமுத்து மகன் பிரகாஷ், 20; பூமிநாதன் மகன் சதிஷ், 24; ஆகியோர் மற்றொரு பைக்கில் சேஷசமுத்திரத்திலிருந்து சங்கராபுரம் வந்து கொண்டிருந்தனர்.

சோழம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே காலனி தரப்பினர் ஓட்டிவந்த பைக் மீது ஊர் தரப்பு இளைஞர்கள் ஓட்டி வந்த பைக் மோதுவது போல் வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இரு பிரிவினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்த இரு தரப்பு புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து சதிஷ், 24, அஜீத், 23; உதயசூரியன், 23; பிரகாஷ், 20; மற்றொரு சதிஷ், 25 ஆகிய 5 பேரை கைது செய்தனர்.மோதல் தொடர்பாக சேஷ சமுத்திரம் கிராமத்தில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வினாயகம், சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இந்தியாவில் குற்றம் :
தடுப்பூசி மோசடி: 4 பேர் கைது
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதாக கூறி, குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் மோசடி செய்துஉள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்தனர்.


latest tamil newsஉலக நடப்பு
சிறை கலவரம்: 5 பேர் பலி
தெகுசிகல்பா: மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசின் எல் பரைசோவில் உள்ள சிறையில் நேற்று வன்முறை வெடித்தது.


latest tamil news
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X