மதிய உணவு திட்டத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய நேரடி மற்றும் சுங்க வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று, மதிய உணவு திட்டத்தின் கீழ்

புதுடில்லி : மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



மத்திய நேரடி மற்றும் சுங்க வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று, மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கும்படி, உணவு தயாரித்து வினியோகம் செய்யும் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன. கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்று, பள்ளிகள்,ஆரம்ப பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும், மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் தேர்வுகள் மற்றும் கல்வி நிறுவன சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளின் போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
19-ஜூன்-202111:46:37 IST Report Abuse
sahayadhas விலக்கு வேண்டாம். GST கு இரண்டு இட்டலி விதிக்கவும்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-202111:44:46 IST Report Abuse
Rasheel மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி பி.ஜே.பி ஒரு பிழைக்க தெரியாத கட்சி. தன் திட்டங்களை விளம்பரம் செய்ய தெரியாத கட்சி என்பதை ஒரு பொது ஜனம் என்ற முறையில் தெளிவாக தெரிகிறது.
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
19-ஜூன்-202116:25:40 IST Report Abuse
Apposthalan samlinமுடியல...
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
19-ஜூன்-202108:50:54 IST Report Abuse
mathimandhiri இதெல்லாம் உண்மையில் மிகப் பெரிய உருப்படியான விஷயங்கள். //// ஆனால் பி.ஜே.பி யினருக்கு இதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி தங்கள் மேல் மக்கள் கவனத்தை ஈர்க்க தெரிய வில்லை///. அதே நேரம் இங்குள்ள திராவிட கட்சிகளோ அரசுபணத்தில் மக்களுக்கு உப்புப் பெறாத அல்லது தேவையற்ற கவர்ச்சி இலவசங்களை கொடுத்து விட்டு எதோ தங்கள் சொந்த பணத்தில் வாரி கொடுத்தாற்போல் பில்ட் அப் கொடுத்து மக்களை மயக்கி வைத்திருக்கிறார்கள்.///அவர்களை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X