மதிய உணவு திட்டத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு| Dinamalar

மதிய உணவு திட்டத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி : மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய நேரடி மற்றும் சுங்க வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று, மதிய உணவு திட்டத்தின் கீழ்

புதுடில்லி : மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



மத்திய நேரடி மற்றும் சுங்க வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று, மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கும்படி, உணவு தயாரித்து வினியோகம் செய்யும் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன. கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்று, பள்ளிகள்,ஆரம்ப பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும், மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் தேர்வுகள் மற்றும் கல்வி நிறுவன சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளின் போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X