பொது செய்தி

இந்தியா

முதுநிலை மருத்துவ தேர்வு: ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனாவை காரணம் காட்டி முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:கொரோனா தொடர்பான பணிகளில் டாக்டர்கள் முழுமையாக ஈடுபட்டு உள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பரவல்

புதுடில்லி : கொரோனாவை காரணம் காட்டி முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.



latest tamil news



முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:கொரோனா தொடர்பான பணிகளில் டாக்டர்கள் முழுமையாக ஈடுபட்டு உள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகமாக உள்ளது.முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வை, இப்போது நடத்துவது சரியாக இருக்காது. தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:கொரோனா நிலையை கண்காணித்து முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை நடத்துவதற்கான தேதிகளை முடிவு செய்யும் படி பல்கலைகளை தேசிய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. தேர்வுக்கு தயாராக, மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கி, தேர்வு தேதிகளை அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்கள் கால அவகாசம் வழங்குவது என்பது பற்றி, நாங்கள் முடிவு செய்ய முடியாது. பல்கலைகள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்தியா போன்ற பெரிய நாடுகளில் கொரோனா நிலைமை ஒரே மாதிரியாக இருக்காது.

டில்லியில் ஏப்ரல், மே மாதங்களில் தொற்று நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது வைரஸ் பரவல் பெரிதும் குறைந்து உள்ளது. கர்நாடகாவில் இப்போதும் நிலைமை மோசமாக உள்ளது. பல்கலைகளை கேட்காமல் நாடு முழுதும் ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிக்க முடியாது. அதனால் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை ஒத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
19-ஜூன்-202110:58:49 IST Report Abuse
ஆனந்த் இது தெரியாமல் கட்டு மர புதல்வர் நீட்டை ரத்து செய்வோம் என உதார் விட்டு.. அதிபுத்திசாலி மக்களும் அதை நம்பி ஒட்டு போட்டு ... என்னத்த சொல்ல
Rate this:
Cancel
19-ஜூன்-202109:46:30 IST Report Abuse
Ramesh Sargam 0 //////
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
19-ஜூன்-202108:37:58 IST Report Abuse
Bala Murugan இப்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்த்துகொண்டே வருகிறது. எல்லோருக்கும் ஊசி போடுவதற்கு கட்டாயப்படுத்துங்கள. பதினெட்டு வயதில் இருந்து ஒரு வயது குழந்தை வரை ஊசி போட ஏற்பாடு செய்யுங்கள். பரீட்சையை பொறுத்தவரை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு இடம் இருக்கிறது. முகக்கவசத்தோடு எழுத வைத்து நடத்தி முடித்து விடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X