பொது செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் நிபுணர் குழு கலைப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை :காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சென்னை :காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் மேகதாதுவில் அணை கட்டும் பணி நடைபெறுவதாக நாளிதழில் செய்தி வெளியானது. அதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழக்கு பதிவு செய்தது.


latest tamil news



சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.இதற்கிடையில் வழக்கை டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்அளித்த மனு நிலுவையில் உள்ளது. அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.'எனவே இந்த வழக்கை தென்மண்டல அமர்வில் விசாரித்தால் குழப்பம் ஏற்படும். அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்' என்றார். அதை ஏற்று தென்மண்டல அமர்வு நியமித்த குழுவை கலைத்து தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202123:23:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்த வல்லுநர் குழுவில் ஸ்பெஷலிஸ்ட்டாக நம்ம கிரிசா வெய்தியனாதன் அவங்களை நியமிச்சாங்க. ஒரே தகுதி அவா பாஜாக்கா கட்சியை தேர்ந்தவர் என்பது தான்.. அவா இருந்திருந்தா மேகதாதுவாலே தமிழ்நாட்டுக்கு பிரச்சினையே இல்லைன்னு ஷூட்டிங் ஆர்டர் கொடுத்திருப்பாங்க..
Rate this:
20-ஜூன்-202100:58:00 IST Report Abuse
Vittalanandஇவுக குருட்டம் போக்கிலே சொல்லுதங்க. அவுக கரண்டு எடுக்க அணை கட்டுறங்க....
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
19-ஜூன்-202121:50:21 IST Report Abuse
unmaitamil இந்த தீயசக்தி திருட்டு கூட்டம் உருப்படியா நாடு முன்னேற ஒரு காரியம் செய்ய மாட்டானுங்க. சும்மா ஊர் பெயர், தெருப்பெயர், ஒன்றியம் என பெயர் மாற்றுதல், வடக்கு தெற்கு, மத பிரிவினை, காவேரி பிரச்சனை .... இப்படி எதையாவது பொய்களை பரப்பி, மக்கள் கவனத்தை திசை திருப்பி, இலவசங்களையும், ஓசி பிரியாணியும் கொடுத்து, ஐந்து வருடத்தில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடித்துவிட்டு ஓடிவிடும் இந்த திருட்டுக்கூட்டம். பின்விளைவுகளை ஆலோசிக்காமல் ஓட்டுப்போட்ட ஏமாளிகளுக்கு வேறு வழியில்லை. அனுபவித்துத்தான் ஆகவேண்டும்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-202119:21:40 IST Report Abuse
Pugazh V அரூராங்கின் முட்டுக்கொடுத்த வரிகள் அல்லவா தேசவிரோதம்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X