பொது செய்தி

தமிழ்நாடு

ஆபாச யு டியூபர்களின் அட்டகாசம்; கடிவாளம் போடுமா காவல் துறை?

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
மதுரை : கொரோனாவை விட வேகமாக பரவி இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும், 'ஆபாச யு டியூபர்'கள் குறித்து புகார்கள் வரும் வரை காத்திருக்காமல் அவர்களின் சேனல்களை கண்டறிந்து முடக்கி, தண்டனை விதிக்க காவல் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரு மெயில் ஐ.டி., இருந்தால் யு டியூப் சேனல் ஆரம்பித்துவிடலாம். குறிப்பிட்ட
youtubers, YouTube channels, TN police

மதுரை : கொரோனாவை விட வேகமாக பரவி இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும், 'ஆபாச யு டியூபர்'கள் குறித்து புகார்கள் வரும் வரை காத்திருக்காமல் அவர்களின் சேனல்களை கண்டறிந்து முடக்கி, தண்டனை விதிக்க காவல் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மெயில் ஐ.டி., இருந்தால் யு டியூப் சேனல் ஆரம்பித்துவிடலாம். குறிப்பிட்ட சப்ஸ்கிரைபர்ஸ், வாட்ச்சிங் ஹவர்ஸ் வந்து விட்டால் வீடியோக்களில் விளம்பரம் இணைக்கப்படும். இதன் மூலம் மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த மோகம் தான், இன்றைய இளைஞர்கள் பலர் யு டியூப் சேனல்கள் ஆரம்பிக்க காரணம்.

கொரோனா தீவிரத்திலும், அங்கீகரிக்கப்பட்ட அச்சு, காட்சி ஊடக துறையினர் மக்களுக்காக பல்வேறு செய்திகள், தகவல்களை தரும் நிலையில், தீப்பெட்டி 'சைஸ்' அறையில் அமர்ந்து வாய்க்கு வந்ததை பேசி வீடியோ பதிவேற்றும், 'யு டியூபர்'களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.


latest tamil newsசேலை கட்ட கற்று தருகிறோம், டாட்டூ வரைகிறோம், கேம் விளையாடுகிறோம் என்ற பெயரில் சிலர் வெளியிடும் வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சம். மாய, மந்திரம் செய்வது, பூட்டிய பூட்டை திறப்பது எப்படி, கெமிக்கல்களை கலந்தால் என்னாகும், பாழடைந்த பங்களாக்களில் பேய்களுடன் பேசுவது என வில்லங்க யு டியூபர்களின் வில்லத்தனம் சினிமாவை மிஞ்சி விடுகிறது.

கொரோனா ஊரடங்கில் பள்ளி மாணவர்கள், ஸ்மார்ட் போன் வழி ஆன்லைனில் படிப்பதால் இந்த வீடியோக்களை பார்த்து, தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.ஆபாச, வில்லங்க யு டியூபர்களை கட்டுப்படுத்தாவிட்டால் இளம் தலைமுறைகள் சீரழிவது உறுதி. ஊருக்கே தெரியும்படி ஆபாச வீடியோ பரப்பி வரும் போது அதையே புகாராக எடுத்து நடவடிக்கை எடுக்கலாம்.

இவர்களுக்கு மத்தியில் பயனுள்ள வீடியோக்களை தரும் யு டியூபர்கள் இருப்பதையும் மறுக்க முடியாது என்கின்றனர் பெண்களும், சமூக ஆர்வலர்களும்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-202119:38:08 IST Report Abuse
Pugazh V நல்ல வுளை இந்த கயவனும் அவன் மனைவியும் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய இனத்தவர் அல்ல. அப்படி இருந்திருந்தால்......இன்னேரம் இங்கே அநாகரிக நாற்றம் கிளப்பப்பட்டு.கேவலமாகியிருக்கும். இப்போது யூ ட்யூபை தூக்கு, தடை பண்ணு.என்று ஏதேதோ எளுதுகிறது. பாவம். ஹி ஹி.ஹா ஹா
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-202119:01:43 IST Report Abuse
Natarajan Ramanathan எவனாவது கேட்டால் உடனே நிர்வாண படம் அனுப்ப பெண்கள் மட்டும் தயாராக இருப்பார்களாம். ஆனால் போலீஸ் மட்டும் இவர்கள் பெயர், முகம், முகவரி எதுவும் தெரிமாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஜூன்-202118:30:07 IST Report Abuse
Nalam Virumbi முக நூலில் (FB), reels and short video பாருங்கள் இந்திய, தமிழ் நாடு கலாச்சாரம் பரப்பும் பெண்களை. கு.. டி ஆட்டுவதில் நாங்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று காண்பிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X