பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் ஊரடங்கு தளர்வு வரலாம்: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை : ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (ஜூன் 19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் சில தளர்வுகளை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தொற்று பரவல் குறையத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக
TN lockdown, Lockdown Relaxation,CM Stalincurfew,

சென்னை : ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (ஜூன் 19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் சில தளர்வுகளை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தொற்று பரவல் குறையத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இம்மாதம் 14ம் தேதி முதல் கடைகள் திறப்பு உட்பட சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு 21ம் தேதி காலை 6:00 மணிக்கு முடிய உள்ளது.

தற்போது, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, தினமும் கொரோனா தொற்று பரவலால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தினசரி பாதிப்பு 9,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, குறைந்தபட்சம் மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர் . ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202117:03:31 IST Report Abuse
முருகன் நீங்கள் எப்பொழுது ஊரடங்கு உத்தரவு போட்டிர்கள் ?. தளர்ந்துவதற்கு
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202123:44:34 IST Report Abuse
மதுரை விருமாண்டிநீ மூடிக்கிட்டு - ஐ மீன் வீடு கதவை மூடிக்கிட்டு - இருந்தா தானே..ஊரடங்கு.. மொதல்லே நீ அடங்கு, அப்பத்தான் ஊரடங்கும்.....
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202115:49:02 IST Report Abuse
oce ஊரடங்கை அப்படியே நீடிக்கவிடவா இல்லை சொல்றதை கேட்காம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்க விடவா. எதை செய்யலாம். மண்டை குழம்புகிறதே.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202113:32:52 IST Report Abuse
Vena Suna உறுமாறும் அல்ல...உருமாறும் ...என்பதே சரி. கொரோனா உரு மாறுதோ இல்லையோ திராவிட கட்சிகளால் நல்ல தமிழ் உரு மாறுது
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஜூன்-202114:37:27 IST Report Abuse
DhurveshKORAANA TN மட்டும் இல்லை / உலகம் முழுமைக்கும் தான் உள்ளது அனால் அமெரிக்காவில் TRUMP ஐ துரத்தினார்கள் kooraana ஓடியது / இங்கு அவர் நண்பரை துரத்துங்கள் கொரானா ஓடிவிடும்...
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
19-ஜூன்-202119:27:34 IST Report Abuse
SKANDH தீமுக தான் காரணம் காரோண பரவலுக்கு. ஒன்றிணைவோம் வா, கோயம்பேட்டை விக்கிரமராஜா கலைத்தது,திருச்சியில் 2 லட்சம் பேரைக்கூட்டியது, மக்கள் கிராம சபையை கூட்டியதே காரோண பரவலுக்கு. காரோண என்பதே கருணாவின் அவதாரமே....
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202123:47:18 IST Report Abuse
மதுரை விருமாண்டிஉரு மாற்றம் - உருவத்தில் மாற்றம்.. உறு மாற்றம் - பெரிய மாற்றம்.. கொரோனா வைரஸ் அதிக வீரியம் அடைந்து வருவதற்கு பெயர் உறு மாற்றம் தானே ?? இதாண்டா தமிழ்.....
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
20-ஜூன்-202116:34:31 IST Report Abuse
SKANDH தல நீ சப்ஜெக்ட் ல கோட்டை விடுற . தமிழ்ல கெட்டிக்காரன் போலிருக்கே, அந்த காலத்து கூத்தில் வருவாநே அது போல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X