பொது செய்தி

தமிழ்நாடு

வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்

Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே திருமண விழாவில் இளைஞர்கள் வித்தியாசமான முறையில் வைத்த திருமண வாழ்த்து பேனர், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும், பொன்னரசி என்பவருக்கும் கடந்த 14ம் தேதி கனியாமூரில் திருமணம் நடந்தது.இதற்கு, உறவினர்களை வரவேற்றும், மணமக்களை வாழ்த்தியும், 'கொலை வெறி
 வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே திருமண விழாவில் இளைஞர்கள் வித்தியாசமான முறையில் வைத்த திருமண வாழ்த்து பேனர், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும், பொன்னரசி என்பவருக்கும் கடந்த 14ம் தேதி கனியாமூரில் திருமணம் நடந்தது.இதற்கு, உறவினர்களை வரவேற்றும், மணமக்களை வாழ்த்தியும், 'கொலை வெறி கொரோனா பாய்ஸ்' என்ற பெயரில் நண்பர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்து.

அதில், 'இன்ஜினியருக்கு தொற்று உறுதி'; 'நண்பா நீ போராட வேண்டியது கொரோனா உடன் அல்ல, மனைவி பொன்னரசி உடன்' என்ற வாசகங்கள்இருந்தன.அதோடு பேனரை வைத்தவர்களின் பெயர்கள் நிலவேம்பு சிவா, ரத்தக் கொதிப்பு ரமேஷ், கோவிட் குமார், பாசிட்டிவ் பிரகாஷ், வைரஸ் வசந்த் என்று அடைமொழியுடன் இடம் பெற்றிருந்தனஇந்த வித்தியாசமான பேனர், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
25-ஜூன்-202111:15:23 IST Report Abuse
Vivekanandan Mahalingam வெட்டி பயல்கள்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202116:41:07 IST Report Abuse
INDIAN Kumar வித்தியாசமாக செய்கிறோம் என்று செய்து வைரல் ஆகி விட்டார்கள்
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
23-ஜூன்-202115:36:42 IST Report Abuse
Sathish நிலவேம்பு சிவா நேர்காணல் விண்ணப்பத்திற்கு போட்டோ அனுப்புவதாக நினைத்து கோட்டு, டை எல்லாம் போட்ட புகைப்படத்தை கொடுத்திருக்கிறார். இவனுங்க கூத்துக்கு அளவே இல்லாம போச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X