பொது செய்தி

தமிழ்நாடு

உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
சென்னை : உடல்நிலை பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார்.நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அமெரிக்காவிற்கு சென்று


சென்னை : உடல்நிலை பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார்.



latest tamil news




நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை தொடர்ந்து பெற்று கொண்டிருந்தார். தற்போது கொரோனா பரவல் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி பாதிப்புகளை அதிகரித்து வந்தது. அதனால் தனது பயணத்தை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் சிகிச்சையை பெற்று கொள்ள அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.


latest tamil news




இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்த வரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி ஒய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் மருமகனான தனுஷ், தி கிரே மேன் படப்பிடிற்காக அமெரிக்காவில் உள்ளார். தற்போது ரஜினியும் அமெரிக்கா செல்லவுள்ளதால் மகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட குடும்பத்தினரும் இணைந்து கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
20-ஜூன்-202107:53:14 IST Report Abuse
Ketheesh Waran ரஜனிகாந்த் தமிழகத்திட்கு நன்மை செய்ய விரும்பினால் மருமகன் தனுஷுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிடவும். தயவுசெய்து மீண்டும் தமிழகம் வரவேண்டாம்
Rate this:
Cancel
20-ஜூன்-202106:36:04 IST Report Abuse
ராமகிருஷ்ணன் இந்திய மருத்துவத்துறையை அவமதிப்பு செய்து விட்டார்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-202100:29:07 IST Report Abuse
DARMHAR வைரமுத்து பைஜாமா போடுவது அவரது விருப்பபடி அதை குறை கூறுவது அழகல்ல நாகரிகமும் அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X