தமிழ்நாடு

கடலூர் நகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை

Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் நகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.தமிழகத்தில் சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடலுார் மாவட்டம் காட்டுமன்னர்கோவிலில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100.17க்கும், டீசல் விலை ரூ. 94.06 க்கும், குமராட்சியில் பெட்ரோல் ரூ.100.01 ஆகவும், டீசல் ரூ. 94.15 எனவும் கடந்த 14ம் தேதி அதிகரித்தது. தமிழகத்திலேயே இங்கு தான் முதல் முறையாக பெட்ரோல் விலை
 கடலூர் நகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை

கடலுார் : கடலுார் நகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.

தமிழகத்தில் சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடலுார் மாவட்டம் காட்டுமன்னர்கோவிலில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100.17க்கும், டீசல் விலை ரூ. 94.06 க்கும், குமராட்சியில் பெட்ரோல் ரூ.100.01 ஆகவும், டீசல் ரூ. 94.15 எனவும் கடந்த 14ம் தேதி அதிகரித்தது. தமிழகத்திலேயே இங்கு தான் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ. 100யை கடந்தது.

நேற்று சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ. 98.14 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து ரூ.92.31 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், கடலுார் நகரில் நேற்று பெட்ரோல் ரூ. 100.80 ; பவர் பெட்ரோல் 103.22 , டீசல் 94.17 என விற்றது.

கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் முற்றிலுமாக வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் நிலையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவர்களை மேலும் வேதனை அடைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X