தமிழ்நாடு

கேள்விக்குறி! விசாரிக்க செல்லும் போலீசாருக்கு பாதுகாப்பு .... தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் அச்சம்

Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் விசாரணை செய்ய செல்லும் போலீசாரின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி., பாஸ்கரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்துகின்றனர். சமீபகாலமாக போலீசார் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்.,ல் வாணியம்பாடியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க.,வினரிடம் விசாரிக்க சென்ற போலீசார்
கேள்விக்குறி!  விசாரிக்க செல்லும் போலீசாருக்கு பாதுகாப்பு .... தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் அச்சம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் விசாரணை செய்ய செல்லும் போலீசாரின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி., பாஸ்கரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்துகின்றனர்.

சமீபகாலமாக போலீசார் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்.,ல் வாணியம்பாடியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க.,வினரிடம் விசாரிக்க சென்ற போலீசார் தாக்கப்பட்டனர். கடந்த மாதம் சென்னை ஓட்டேரியில் மதுவிற்ற கும்பலை பிடிக்கச்சென்ற போலீசார் தாக்கப்பட்டனர். ஜூன் 2ல் வடமதுரை அருகே கதவை தட்டியவரை தட்டிக்கேட்டதற்காக ஆயுதப்படை போலீஸ்காரர் அருள்பிரிட்டோ தாக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தகராறை விசாரிக்க சென்ற மதுரை வாடிப்பட்டி போலீஸ்காரர் மணிமாறன் மூக்கை போதையில் ராணுவவீரர் நவநீதகிருஷ்ணன் கடித்து துப்பினார். தொடர்ந்து போலீசார் தாக்கப்படுவது சக போலீசார் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறியதாவது: பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சியின்போதே எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதை மீறும்போது மனித உரிமை மீறலாகி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகிறோம். இதனால் நாங்கள் அதிக கடினத்தன்மையை கையாளுவதில்லை. இது சாதிய பிரச்னை, ஊர் தகராறு, தனியாக விசாரிக்க செல்லும் சமயங்களில் எங்கள் மீது தாக்குதல் நடத்த வழிவகுக்கிறது, என்றனர்.

மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது: போலீஸ்காரர் மணிமாறன் தாக்கப்பட்ட விவகாரத்தில், தகவல் கிடைத்தவுடன் தனி ஆளாக அவர் சென்றுள்ளார். ராணுவவீரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஸ்டேஷனிற்கு அழைத்து வர முயற்சித்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.கொலை முயற்சி வழக்கில் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க போலீசார் விசாரிக்க செல்லும்போது உடன் ஒருவரை அழைத்துச்செல்ல வேண்டும். அப்பகுதி ரோந்து வாகனம் உடனே செல்ல வேண்டும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜூன்-202110:55:45 IST Report Abuse
Lion Drsekar நவநீதகிருஷ்ணன் ....மட்டுமே வெளிவந்திருக்கிறது, வாட்சப்பில் பார்த்தல் உண்மை நிலவரம் தெரியவரும், போலி ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு தயாரித்து கொடுத்தல், குறிப்பிட்ட நேரத்துக்குப்பிறகு கடையைத்திறந்து வைத்ததற்கு வட்டாட்சியர் தாக்கப்பட்டது பிறகு காவலர்கள் சமாதானப்படுத்தியது, இன்றைக்கு ........ பயப்படவேண்டிய நிலைக்கு எல்லா துறைகளும் வந்துவிட்டது, இதில் காவலர்களுக்கும் விதிவிலக்கு அல்ல. ஆடும்வரை ஆட்டம்.... வந்தே மாதரம்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
21-ஜூன்-202107:00:38 IST Report Abuse
N Annamalai உண்மை யாருக்கு பிரச்னை என்றாலும் உடனே செல்பவர்கள் காவலர்கள் .அவர்களுக்கு மரியாதை கொடுக்க மக்கள் மனநிலையில் தயராக இருக்க வேண்டும் .அவர்களும் இறுக்கமான கடினமான எண்ணங்கலில் இருந்து மக்களை நேசிக்க வேண்டும் .மக்கள் தொகை அதிகம் .காவலர்களுக்கு நாம் நல்லது தான் செய்வோம் என்று நம்ம்பிக்கை இருக்க வேண்டும் .மக்களுக்கும் இவர் நமக்காக உழைக்கிறார் என்ற எண்ணம் வேண்டும் .அப்போது சமநிலை ஏற்படும் .
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
21-ஜூன்-202104:33:28 IST Report Abuse
Manian அவிங்களுக்கு பாது காப்பு கொடுக்கத்தானே அம்மா ஜெயா கோயில் கட்டி இருக்கோம். ஒரு நடை போயி நடைமுறை மாமூல் அர்ச்சனை சீட்டு வாங்கி ஆட்டுகிடா பலி கொடுத்தால் இந்த தொல்லை தீரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X