அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொன்னதும் மறந்ததும்!

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
நீட் தேர்வு தொடர்பாக திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தில், ஜன., 23ல் நடந்த கிராம மக்கள் சபை கூட்டத்தில், ஸ்டாலின் அளித்த வாக்குறுதி:இ.பி.எஸ்., முதல்வராக வந்த பின், நீட் தேர்வு உள்ளே நுழைந்து விட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உறுதியாக இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு போராட வேண்டுமோ, அந்த அளவுக்கு போராடி தமிழகத்திற்கு விலக்கு வாங்கி வருவது தான், எங்களின் கொள்கையாக

நீட் தேர்வு தொடர்பாக திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தில், ஜன., 23ல் நடந்த கிராம மக்கள் சபை கூட்டத்தில், ஸ்டாலின் அளித்த வாக்குறுதி:


latest tamil news




இ.பி.எஸ்., முதல்வராக வந்த பின், நீட் தேர்வு உள்ளே நுழைந்து விட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உறுதியாக இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு போராட வேண்டுமோ, அந்த அளவுக்கு போராடி தமிழகத்திற்கு விலக்கு வாங்கி வருவது தான், எங்களின் கொள்கையாக இருக்கும்.


உதயநிதி என்ன சொன்னார் ?



மதுரை வடக்கு தொகுதியில், மார்ச் 22ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தபோது, உதயநிதி கூறியதாவது:

பா.ஜ.,வும், மோடியும் கூறுகின்றனர் என்று, நீட் தேர்வை திணித்தனர். அனிதாவில் ஆரம்பித்தது, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஞாபகம் உள்ளதா... நல்லா படிக்கிற பெண்; ஏழை குடும்பத்து பெண். 1,200க்கு, 1,176 மதிப்பெண்கள் பெற்றது. அதோட ஒரே கனவு டாக்டராக வேண்டும் என்பது. அதை சிதைத்து, முதல் தற்கொலை அனிதா. மூன்று ஆண்டுகளில், 14 மாணவ - மாணவியர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் எனக்கூறி தற்கொலை செய்துள்ளனர். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் இருந்து, 100 சதவீதம் நீட் தேர்வை அடியோடு ஒழித்து கட்டுவேன்' என, தி.மு.க., தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார்.



latest tamil news





கனிமொழி கூறியது


பெரம்பலுார் மாவட்டத்தில், மார்ச் 14ம் தேதி, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தபோது, 'நீட் தேர்வால், நம் மாணவர்கள் டாக்டராக கூடிய கனவு நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என, உறுதி அளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202101:06:22 IST Report Abuse
Chennaivaasi 1176 மார்க்குகள் வாங்கின அனிதாவுக்கு எப்படி NEET தேர்வில் பாஸாக முடியவில்லை? அதற்கு காரணம் திறமையின்மையே. அதை விடுத்து NEET வேண்டாம் அதை ரத்து செய்வோம் என்று அரசியல் அறிவிலிகள் பிதற்றுகிறார்கள். எந்த ஒரு அரசியல் வாத்தியாவது NEET தேர்வில் ஐந்து மார்க் எடுக்க முடியுமா? முதலில் நமது கல்வி திட்டத்தை மாற்றுங்கள். தமிழ்நாட்டு ஆசிரியர்கள் CBSE பாட திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க அவர்களை தயார் செய்யுங்கள். தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு திறமை குறைவு உண்டு. நீட் இல் போட்டி போட்டு ஜெயிக்க முயலவேண்டுமே தவிர வேண்டாம் என்று சொல்வது மடமை.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202105:24:11 IST Report Abuse
Siva Kumar நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேறுவோம். ஆனால் இன்னும் ஒரு இரண்டு நூற்றாண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
23-ஜூன்-202107:05:33 IST Report Abuse
Krishnan மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு தடை செய்யப்பட்டால் மருத்துவ கல்லூரிகளை கட்டியவர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு சீட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடலாம். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒவ்வொரு சீட்டுக்கு அரசியல்வாதிகளுக்கு பணம் கொட்டு கொட்டு என்று கொட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X