திமுக மூத்த தலைவர்கள் குடிசைகள் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை...

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
என்னுடைய, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், சேப்பாக்கம் குடிசைப்பகுதி மக்கள் என்னை அவர்களின் வீடுகளுக்கு வர வேண்டும் என, அன்புடன் அழைத்தனர். அதன்படி அவர்கள் வீடுகளுக்கு சென்ற போது, அன்பை பொழிந்து மகிழ்ந்தனர்.- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி'தொடர்ந்து இப்படியே செய்யுங்கள். அத்தனையும் ஓட்டுகள். ஆனால், தி.மு.க., மூத்த தலைவர்கள், குடிசைகள் பக்கம் எட்டிக்கூட
திமுக மூத்த தலைவர்கள் குடிசைகள் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை...

என்னுடைய, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், சேப்பாக்கம் குடிசைப்பகுதி மக்கள் என்னை அவர்களின் வீடுகளுக்கு வர வேண்டும் என, அன்புடன் அழைத்தனர். அதன்படி அவர்கள் வீடுகளுக்கு சென்ற போது, அன்பை பொழிந்து மகிழ்ந்தனர்.
- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி


'தொடர்ந்து இப்படியே செய்யுங்கள். அத்தனையும் ஓட்டுகள். ஆனால், தி.மு.க., மூத்த தலைவர்கள், குடிசைகள் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை...' என, போட்டுக் கொடுக்க தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை.பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள், ஐ.ஓ.பி., வங்கியில் தான் உள்ளன. அதை கருதி, அந்த வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்


'நல்ல கோரிக்கை தான். எனினும், தனியார்மயமானாலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையில் எந்த பாதிப்பும் வராதே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை.கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவோருக்கு, அரசே வாகன வசதியை செய்து தர வேண்டும். இந்த வசதி இல்லாததால், ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்.
- அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல்


'உண்மை தான். மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி வந்து வீட்டில் விடாமல், வேறு வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அறிக்கை.அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக இறப்பு அதிகமில்லை. மும்பையில் தொற்று நேற்று சற்றே அதிகரித்துள்ளது.
- அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் ராமன்


'இப்படி மாற்றி மாற்றி உலக நாடுகளை அவதிக்கு உள்ளாக்கினால், எப்போது தான் விடிவு என்ற கேள்வி வலுக்கிறது...' என, கவலை தெரிவிக்க தோன்றும் வகையில், அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் ராமன் அறிக்கை.காங்., - எம்.பி., ராகுலை பார்த்து மக்கள் தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்ட வண்ணம் உள்ளனர்; ஆனால், பதில் தான் இல்லை. அது, 'நீங்கள் எங்கு, எப்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள்?' என்பது தான்.
- பா.ஜ., மாநில பொதுச் செயலர் ராகவன்


latest tamil news
'அவரும், சோனியாவும் நம் நாட்டு ஊசியை நம்பாமல், வெளிநாட்டில் போட்டிருப்பரோ...' என, சந்தேகம் கிளப்ப தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொதுச் செயலர் ராகவன் அறிக்கை.புதுக்கோட்டை மாவட்டம், என்னுடைய கரூர் லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மூத்த அதிகாரிகளும் பெண்களாக உள்ளனர். அந்த படையுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி; வாய்ப்பு ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி.
- கரூர் காங்., பெண் எம்.பி. ஜோதிமணி


'மகிழ்ச்சியான விஷயம் தான். பெண்கள் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் வளர்ச்சி அடைந்தால் நல்லது தான்...' என, பாராட்ட தோன்றும் வகையில், கரூர் காங்., பெண் எம்.பி. ஜோதிமணி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூன்-202105:09:51 IST Report Abuse
meenakshisundaram உதயநிதிக்கு 'நைனா 'க்கு இல்லாத ஒரே தகுதி(?) இன்னான்னா ,சினிமாலே நடிச்சதுனாலே இதை போல குடிசைக்கு செல்வது போன்ற விஷயங்கள் சினிமா சூட் போலத்தான்.அப்புறம் அடுத்த ஷாட்க்கு போக வேண்டியதுதானே?
Rate this:
Cancel
Nirmal susai - sydney,ஆஸ்திரேலியா
20-ஜூன்-202104:51:41 IST Report Abuse
Nirmal susai First, let the BJP,RSS and other allied groups offices and spent quality time with them
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-202123:30:33 IST Report Abuse
SexyGuy . பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எத்தனை குடிசைகளுக்கு இதுவரை சென்றார்கள்?. நாராயணன், ராகவன், எச்ச ராஜா போன்ற நபர்கள் சென்ற குடிசைகள் எதனை?. பிரதமர் மோடி எத்தனை குடிசைகளுக்கு சென்றார்?. காஞ்சி சங்கராச்சாரி சென்றாரா?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X