பொது செய்தி

இந்தியா

3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட்டின் 3வது அலை தவிர்க்க முடியாதது எனவும், அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த முதல் மற்றும்
AIIMS,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை, covid, thirdwave, கோவிட், மூன்றாவது அலை

புதுடில்லி: கோவிட்டின் 3வது அலை தவிர்க்க முடியாதது எனவும், அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாம் பாடம் கற்று கொண்டது போல் தெரியவில்லை. மீண்டும் கூட்டங்கள் கூடுகிறது. மக்கள் ஒரே இடத்தில் சேர்கின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரிக்கக்கூடும். 3வது அலை நமது நாட்டில் தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் 3வது அலை துவங்கும். இன்னும் சிறிது நாட்கள் கூட ஆகலாம். இது நாம் எப்படி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதை பொறுத்தது.


latest tamil news



தடுப்பூசி போடுவது சவாலாக இருக்கும். ஒரு அலை உருவாக, பொதுவாக 3 மாதங்கள் ஆகும். ஆனால், பல காரணிகளை பொறுத்து குறைந்த காலத்திலும் அந்த அலை உருவாகலாம். கோவிட் நடைமுறைகளை தாண்டி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கடந்த முறை, புதிய உருமாறிய வைரஸ், வெளியில் இருந்து வந்து இங்கு பரவியது. இதனால், அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உருமாறிய வைரஸ் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இதனால், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால், நாம் எளிதில் பாதிக்கப்படுவோம். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால், நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202122:20:23 IST Report Abuse
உ. ராஜன் 3வது அலையின் மீதான பொதுமக்களின் அச்சத்தின் கடுமையை உணர்த்தும் வகையில் இருக்கிறது, செய்தியுடன் நீங்கள் வெளியிட்ட இமேஜ். பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
19-ஜூன்-202122:03:36 IST Report Abuse
Ramasamy மக்கள் திருந்தாவிட்டால் மூன்றாவது என்ன முப்பதாவது அலை கூட வரும்.
Rate this:
Cancel
19-ஜூன்-202119:40:36 IST Report Abuse
ஆப்பு பரவாயில்லை. எல்லோரும் முழிச்சுக்கிட்டாங்க. மூணாவது அலைக்கு அச்சாரம் போடறாங்க. இன்னும் ரெண்டு, மூணு அலைக்கு ரெடியாகுங்க. கொரோனா தானே போனால்தான் உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X