பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் கட்சிகளுடன், ஜூன் 24ல் பிரதமர் ஆலோசனை

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுடன் வரும் 24ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கடந்த, 2019 ஆக.,ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல்
PM Modi, All Parties, Jammu And Kashmir,

புதுடில்லி: காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுடன் வரும் 24ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கடந்த, 2019 ஆக.,ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதுடன், சட்டசபை தேர்தலை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த அழைப்பு விடுத்தால், அதில் பங்கேற்க தயாராக இருப்பதாக, இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள், தனித் தனியாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் வியாழன் (ஜூன்24) அன்று, காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அம்மாநில மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அடுத்த வாரம் கூட்டம் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறையான அழைப்பிற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.


latest tamil news



இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202119:38:15 IST Report Abuse
ஆப்பு அங்கேதான் கொரோனா பரவல் கொஞ்சமா இருக்கு. மீண்டும் பறந்து போய் பரப்புரை செஞ்சு பரப்பதான் இந்த ஆலோசனை.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
19-ஜூன்-202118:12:30 IST Report Abuse
கொக்கி குமாரு மோடிஜியின் போட்டோவை பார்க்கும்போது ஒரு ஞானி கணக்கா மக்கள் மீது, நாட்டின் மீது கொண்ட அக்கறையில் வேலை செய்வது கண்கூடாக தெரிகிறது. அப்படியே இந்த பக்கம் திரும்பி கருணாநிதியின் திருட்டு திமுகவினர் போஸ் கொடுக்கும் போட்டோக்களை பார்க்கவும். சுற்றிலும் ஆறேழு அல்லக்கைகள், படிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் அலமாரி முழுக்க புத்தகங்கள், கட்டுமரம் பெரிய அளவில் சிரிக்கும் போட்டோ, கருப்பு உடை அணிந்து கடவுளே இல்லை என்று சொல்லி மக்கள் பணத்தை ஆட்டையை போட்டவர்கள், ஒவ்வொருவரும் கட்சி கரை கொண்ட வேஷ்டி, துண்டுடன்.....இதுக்கு மேல் காண சகிக்கலை.
Rate this:
Cancel
SelfDhyana - Chennai,இந்தியா
19-ஜூன்-202115:25:15 IST Report Abuse
SelfDhyana கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்ல ஒரு நடவடிக்கை. ஜனநாயகம் காட்டும் பாதை. வாழ்த்துக்கள்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஜூன்-202118:35:28 IST Report Abuse
Dhurveshஎது demonitaization சொல்லுகிறீர்களா என்ன...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஜூன்-202119:54:11 IST Report Abuse
Dhurveshஆட்சி கட்டிலில் அமர்ந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு நாள் கூட செய்தியாளர்களை சந்தித்ததில்லை. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, ஜிஎஸ்டி என்று தன்னிச்சையாக அறிவித்த திட்டடங்களினால் பல சிறு குறு தொழிற்சாலைகள் மூடல், அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு இழப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் திடீர் என்று அறிவித்த ஊரடங்கு உத்தரவால் பல்லாயிரக் கணக்கானவர்கள் மரணம், இரண்டாவது அலையில் தடுப்பூசி கொள்கையில் குழப்பம் என்று பலவிதத்திலும் இந்திய மக்களை அல்லல்படுத்தி வரும் பிரதமருக்கு உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் முதல் இடமாம். எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதற்கென்றே சில கருத்து கணிப்புகள் நடத்த படுகின்றன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X