காஷ்மீர் கட்சிகளுடன், ஜூன் 24ல் பிரதமர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் கட்சிகளுடன், ஜூன் 24ல் பிரதமர் ஆலோசனை

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (10)
Share
புதுடில்லி: காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுடன் வரும் 24ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கடந்த, 2019 ஆக.,ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல்
PM Modi, All Parties, Jammu And Kashmir,

புதுடில்லி: காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுடன் வரும் 24ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கடந்த, 2019 ஆக.,ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதுடன், சட்டசபை தேர்தலை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த அழைப்பு விடுத்தால், அதில் பங்கேற்க தயாராக இருப்பதாக, இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள், தனித் தனியாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் வியாழன் (ஜூன்24) அன்று, காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அம்மாநில மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அடுத்த வாரம் கூட்டம் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறையான அழைப்பிற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.


latest tamil news



இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X