மியான்மர் குறித்து ஐ.நா., தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஐ. நா., : மியான்மரில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மியான்மரில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள்
India,U.N,United Nations,இந்தியா,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை

ஐ. நா., : மியான்மரில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மியான்மரில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் ஓட்டு போட்டன. பெலாரஸ் மட்டும் எதிராக ஓட்டளித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான இந்தியா, வங்கதேசம் மற்றும் பூடான், நேபாளம், சீனா,லாவோஸ், தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் புறக்கணித்தன.


latest tamil news




இது தொடர்பாக ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியதாவது: மியான்மரின் அண்டை மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல், அவசர கதியில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது, தற்போதைய சூழ்நிலைக்கு உதவாது. மேலும், மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
20-ஜூன்-202110:58:41 IST Report Abuse
P Karthikeyan இங்கே கருத்து சொன்னவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ்நாடு அரசியலே புரியாது. இதுல இன்டர்நேஷனல் அரசியலுக்கு கருத்து சொல்ல வந்துடீங்க. உலக அளவில் இந்திய இன்றைக்கு எவ்வளவு முக்கியமான இடத்தில இருக்கிறது என்று உங்களில் யாரவது சொல்ல முடியுமா . உங்களுக்கு தெரிந்ததெல்லாம் go back Modi, இலவசம் கொடுத்தால் வாங்கிக்கொள்வது , 2000 கொடுப்பார்களா 4000 கொடுப்பார்களா என்று ரேஷன் கடையில் வரிசை கட்டி நிற்பது, டாஸ்மாக்கில் தள்ளுமுள்ளு செய்து சரக்கு வாங்குவது , இவைதான். சீனாக்காரன் 300 கிலோ மீட்டர் தொலைவில் வந்தது பற்றி மாநில அரசிடம் கேட்டீர்களா, இலங்கை பழைய பேருந்துகளை நம்ம கடல்புரத்தில் கொண்டு கொட்டுகிறான் அதை பற்றி யாரவது கேட்டீர்களா, . உங்கள் சொந்த முதுகை சொறிஞ்சு விடவே உங்களுக்கு ஆள் கேட்குது . இதுல இன்டர்நேஷனல் அரசியல் பேச வந்துட்டாங்க . போங்க போய் NEET தேர்வு பற்றி சிதம்பரம் சம்சாரம் நளினிக்கிட்ட தில் இருந்த கேளுங்க.
Rate this:
Cancel
19-ஜூன்-202122:58:37 IST Report Abuse
kulandhai Kannan சரியான முடிவு. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு, என்றும் நம் ஆதரவு தரவேண்டும்.
Rate this:
Cancel
19-ஜூன்-202122:14:32 IST Report Abuse
உ. ராஜன் மியான்மர் மீதான ஐ. நா. தீர்மானம். சரி. ஆனால் தீர்மானத்தின் விவரங்களை ஏன் செய்தியில் குறிப்பிடவில்லை? கோடிட்டாவது காட்டியிருந்தால் அச்செய்தி முழுமை பெற்றிருக்கும் . நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X