பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜூன் 19,20வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, சென்னை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.ஜூன் 21 முதல் 23 வரைமேற்கு தொடர்ச்சி
Tamilnadu,rain,தமிழகம்,மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


ஜூன் 19,20



வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, சென்னை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.


ஜூன் 21 முதல் 23 வரை


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம், ஹாரிசன் எஸ்டேட் பகுதிகளில் தலா 3 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, சின்னக்கல்லார், சோலையார், நீலகிரி மாவட்டம் அவுலாஞ்சி, தேவாலா, மேல்பவானி ஆகய இடங்களில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகி உள்ளது.



மீனவர்களுக்கான எச்சரிக்கை



அரபிக்கடல் பகுதிகள்




ஜூன் 19,20


கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


ஜூன் 19 முதல் 23 வரை


தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., அவ்வப்போது 65 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X