தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (8)
Share
ஐதராபாத்: கோவிட் 2வது அலை பாதிப்பு பெரும்பாலும் குறைந்துவிட்டதால், தெலுங்கானாவில் முழு ஊரடங்கை திரும்ப பெற்று கொள்ள மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.கோவிட் இரண்டாவது அலையில் தெலுங்கானா மாநிலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது கடந்த ஜூன்9ம் தேதி முடிந்த நிலையில், மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,400
Telangana, Covid, Lockdown, Restrictions,

ஐதராபாத்: கோவிட் 2வது அலை பாதிப்பு பெரும்பாலும் குறைந்துவிட்டதால், தெலுங்கானாவில் முழு ஊரடங்கை திரும்ப பெற்று கொள்ள மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கோவிட் இரண்டாவது அலையில் தெலுங்கானா மாநிலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது கடந்த ஜூன்9ம் தேதி முடிந்த நிலையில், மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,400 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர். கோவிட் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதை தொடர்ந்து, ஊரடங்கை தளர்த்துவது குறித்து மாநில அமைச்சரவை ஆலோசனை நடத்தியது.


latest tamil news




இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தெலுங்கானாவில் அமலில் முழு ஊரடங்கை முற்றிலும் வாபஸ் பெற்று கொள்ள மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாலும், தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் விகிதம் குறைந்துள்ளதாலும், மருத்துவ குழுவினரின் பரிந்துரைப்படி ஊரடங்கை வாபஸ் பெற்று கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அனைத்து துறைகளும் உடனடியாக நீக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X