தமிழகத்தில் 8,183 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 8,183 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021
Share
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 8,180 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 8,183 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 180 பேர் உயிரிழந்து உள்ளனர். 18,232 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 29 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 38 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 8,180 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 8,183 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 180 பேர் உயிரிழந்து உள்ளனர். 18,232 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 29 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 38 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 71,179 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 8,183 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,09,96,798 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 4,620 பேர் ஆண்கள், 3,563 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,12,721 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,01,921 ஆகவும் அதிகரித்து உள்ளது. 18,232 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,04,885 ஆக உயர்ந்துள்ளது.

180 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 70 பேர் தனியார் மருத்துவமனையிலும், 110 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,015 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X