சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தலைக்கு மேல் கத்தி!

Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
தலைக்கு மேல் கத்தி!'அமைதியாக போயிட்டிருந்த நம் அரசியல் வாழ்க்கையில், இப்போது புயல் வீச துவங்கி விட்டதே...' என, சோகத்தில் ஆழ்ந்துள்ளார், திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடி பறந்த வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ,வின் காவிக்கொடியை பறக்க செய்தவர்களில்

 அக்கம் பக்கம்


தலைக்கு மேல் கத்தி!



'அமைதியாக போயிட்டிருந்த நம் அரசியல் வாழ்க்கையில், இப்போது புயல் வீச துவங்கி விட்டதே...' என, சோகத்தில் ஆழ்ந்துள்ளார், திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடி பறந்த வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ,வின் காவிக்கொடியை பறக்க செய்தவர்களில் பிப்லப் குமாரும் ஒருவர்.கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் காலத்தை ஓட்டி வந்த முதல்வர் பிப்லப் குமாருக்கு, இப்போது திரிணமுல் காங்., வாயிலாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சி பிரமுகர்கள் பலரும், திரிணமுல் காங்கிரசுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர்; இது, அருகில் உள்ள திரிபுராவிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுதீப் ராய் பர்மன் தலைமையில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் திரிணமுல் காங்கிரசுக்கு ஓடத் தயாராகி வருகின்றனர். 'பிப்லப் குமாரை முதல்வர் பதவியிலிருந்து துாக்க வேண்டும். என்னை முதல்வராக நியமிக்க வேண்டும். இல்லையெனில், மம்தா கட்சிக்கு தாவி விடுவேன்' என்கிறார் பர்மன். இதனால் பிப்லப் குமாரின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. 'எப்போது வேண்டுமானாலும், அவரிடமிருந்து பதவி பறிக்கப்படலாம்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.


சின்ன பையன்!



'பதவி ஆசையும், அதிகார போதையும், உறவினர்களைக் கூட எதிரியாக்கி விட்டதே...' என, கண்ணீர் வடிக்கிறார், லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வான்.இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன். தந்தை இறந்தபின் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற சிராக், தன் அனுபவமின்மையால் சரியான அரசியல் முடிவுகளை எடுக்க முடியாமல் சொதப்பினார்.கூட்டணியில் இருந்த பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை நேரடியாக எதிர்த்ததுடன், கடந்த சட்டசபை தேர்தலில், அவரது கட்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். இதற்கு பழிவாங்குவதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிதிஷ் குமார், இப்போது தன் ஆட்டத்தை துவக்கிஉள்ளார். சிராக் பஸ்வானின் கட்சியை சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மறைமுக அரசியலை அரங்கேற்றி வருகிறார். இதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் யார் தெரியுமா... சிராகின்
சித்தப்பாவும், கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான பசுபதி குமார் பரஸ். சில எம்.பி.,க்களையும், கட்சி நிர்வாகிகளையும் தன் கைக்குள் போட்டு, சிராக் பஸ்வானை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் பசுபதி. சித்தப்பாவின் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல், 'இதுபோன்ற ஒரு துரோகத்தை, நம் நாட்டில் எந்த கட்சியும் சந்தித்தது இல்லை' என, அழுது புலம்புகிறார் சிராக்.பசுபதி ஆதரவாளர்களோ, 'தெலுங்கு தேசம், அ.தி.மு.க., கட்சிகளில் நடந்த கூத்து எல்லாம் சிராகிற்கு தெரியவில்லை. சின்ன பையன் அல்லவா; அவருக்கு அரசியல் தெரியவில்லை' என கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X