கரூர் வைஸ்யா வங்கி சார்பில் 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை

Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:தமிழக அரசின், '108' ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டிற்காக, கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய, 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.மறைந்த கருணாநிதி, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, 2008 செப்., 15ல் துவக்கி வைத்தார். அவசர மருத்துவ சிகிச்சை, தீ விபத்து, சாலை விபத்து போன்ற காலங்களில், பொது மக்கள், '108' என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு,
 கரூர் வைஸ்யா வங்கி சார்பில் 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை

சென்னை:தமிழக அரசின், '108' ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டிற்காக, கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய, 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

மறைந்த கருணாநிதி, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, 2008 செப்., 15ல் துவக்கி வைத்தார். அவசர மருத்துவ சிகிச்சை, தீ விபத்து, சாலை விபத்து போன்ற காலங்களில், பொது மக்கள், '108' என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு, இச்சேவை பெறும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை, 27.53 லட்சம் கர்ப்பிணியர் உட்பட, 1.12 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.சமூக பொறுப்புணர்வோடு, கரூர் வைஸ்யா வங்கி, தமிழக அரசு செயல்படுத்தும், '108' இலவச ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டிற்கு, 64.46 லட்சம் மதிப்புள்ள, இரண்டு மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள். மலைவாழ் மக்களின் சேவைக்காக, மலைப் பகுதிகளில் செல்லும் வகையில், 1.12 கோடி ரூபாய் மதிப்பிலான, எட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கி உள்ளது.

இவற்றின் சேவையை, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள வசதிகள் பற்றியும் கேட்டறிந்தார். இந் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, காந்தி, சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., உதயநிதி, கரூர் வைஸ்யா வங்கி பொது மேலாளர் சுதாகர், மண்டல மேலாளர்கள் கிருஷ்ணன், கணேசன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X