சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இலங்கையில் சீனத்தீவு: இந்தியாவுக்கு ஆபத்தா?

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
இலங்கையில் கொழும்பு துறைமுகம் அருகே, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதாவது 10 ஆயிரத்து, 39௦ கோடி ரூபாய் செலவில், துறைமுக நகர் ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. கடலில் மண்ணை கொட்டி மேடாக்கி, செயற்கை தீவாக இது உருவாக்கப்படுகிறது. இலங்கை வரைபடத்துக்கு வெளியே, ஒரு தனி நிலப்பரப்பை உருவாக்கும் அதிபயங்கர திட்டம் இது. இலங்கையின் வரைபடத்தையே மாற்றும் முயற்சி என்று
இலங்கை, சீனத்தீவு, இந்தியாவுக்கு ஆபத்தா?

இலங்கையில் கொழும்பு துறைமுகம் அருகே, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதாவது 10 ஆயிரத்து, 39௦ கோடி ரூபாய் செலவில், துறைமுக நகர் ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. கடலில் மண்ணை கொட்டி மேடாக்கி, செயற்கை தீவாக இது உருவாக்கப்படுகிறது. இலங்கை வரைபடத்துக்கு வெளியே, ஒரு தனி நிலப்பரப்பை உருவாக்கும் அதிபயங்கர திட்டம் இது.

இலங்கையின் வரைபடத்தையே மாற்றும் முயற்சி என்று சொல்லலாம். ஆனால், இலங்கை அரசோ, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் என்கிறது. இதற்கான மசோதா, இலங்கை பார்லிமென்டில் மே 20ல் நிறைவேற்றப்பட்டது. 'கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதா' என்பது அதன் பெயர்.

இந்த ஆணைய மசோதா, என்னென்ன ஆபத்தான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது என்பதை, இலங்கையின் முக்கிய அரசியல் விமர்சகரான நிலாந்தான் விவரிக்கிறார். அவர் சொல்வதாவது:

* சீனா உருவாக்கும் துறைமுக நகரம், எந்தவொரு உள்ளாட்சி மன்றத்தின் அதிகார வரம்புக்குள்ளும் வராது

* துறைமுக நகரத்தை, அதிபரால் நியமிக்கப்படும் ஒரு விசேஷ ஆணைய குழுவே நிர்வகிக்கும். இந்த ஆணை குழுவின் உறுப்பினர்கள் இலங்கை பிரஜைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை

* இந்த ஆணைய குழுவின் பிரதிநிதிகளுக்கு எதிராக, இலங்கை தீவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது

* இலங்கை பார்லிமென்ட் ஒப்புதல் பெறாமலே, தனி நிதியம் ஒன்றை ஆணையம் பராமரிக்க முடியும்

* ஆணையத்தின் குழுவுக்கு வரிச்சலுகை வழங்கும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. இது, பார்லிமென்ட் அதிகாரத்துக்கு சமமானது

* இந்த நகரின் நிதி நடவடிக்கைகளை, அரசு கண்காணிக்க முடியாது. தனியார் நிறுவனம் ஒன்றின் வாயிலாகவே, அவை கணக்காய்வு செய்யப்படும்

* துறைமுக நகரத்தில் வெளிநாட்டவர் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இலங்கை நாட்டவர் முதலீடு செய்ய வேண்டும் என்றால், வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தான் முதலீடு செய்ய முடியும்

* துறைமுக நகரத்தில் பணிபுரிவோருக்கு, சீன கரன்சியான யுவான் தான் சம்பளமாக வழங்கப்படும். அது, ரொக்கமாக அல்லது வங்கியில் செலுத்தப்படும். இதன் வாயிலாக, இலங்கைக்குள் சீன கரன்சியின் செல்வாக்கு நுழைக்கப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக, சீன கரன்சி புழக்கத்தில் விடப்படுகிறது

* இலங்கை மக்கள், இந்த துறைமுக நகரத்தின் சேவைகளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எனினும், அங்கு வாங்கும் பொருட்களை நகரத்துக்கு வெளியே கொண்டு வரும் போது, அவற்றுக்கு வரி செலுத்த வேண்டும். அதாவது, ஒரு நாட்டுக்குள், இன்னொரு நாட்டின் அமைப்புக்கு வரி செலுத்தும் முறை அறிமுகமாகிறது

* தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள, 21 சட்டங்களில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்துக்கு விலக்கு தரப்பட்டுள்ளது எனவே தான், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, 'சீனாவின் காலனியாக இலங்கை மாறி வருகிறது' என்று பதறுகிறார்.

தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான எம்.ஏ.சுமந்திரன், 'இலங்கை தன் பரப்பை, சீனாவிடம் இழந்திருக்கிறது. நீங்கள் ஈழத்தை பற்றி நிறைய பேசியிருக்கிறீர்கள். இப்போது ஒரு சீழத்தை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள். அதாவது, சீன ஈழத்தை உருவாக்கி வருகிறீர்கள்' என்று சாடினார்.இவ்வாறு நிலாந்தான் கூறியுள்ளார்.


எழும் சந்தேகங்கள்

இப்போது நமக்கு எழும் சந்தேகம் என்னவென்றால், கொழும்பு நகருக்கு உள்ளேயே சிறப்பு பொருளாதார மண்டலத்தை சீனா செயல்படுத்தியிருக்க முடியும். ஆனால், கடலுக்கு நடுவே தனித்தீவை உருவாக்கி, வரைபடத்தில் இல்லாத நிலப்பரப்பிலிருந்து செயல்பட நினைப்பது ஏன்?

ஒருவேளை வரைபட நிலப்பரப்புக்குள் செயல்பட்டால், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டியிருக்கும் என்பதாலா? வரைபடத்துக்கு வெளியே இயங்கும் போது - இலங்கை சட்டங்களுக்கு வெளியே இயங்கும் சுதந்திரம் கிடைத்து விடும் என்பதாலா?ஒவ்வொரு நாட்டின் குறைந்த அலைப் பகுதியிலிருந்து - low tide stretch, 12 கி.மீ., வரையுள்ள பகுதி, அந்த நாட்டுக்கு சொந்தமான கடல் பரப்பாகும். அதற்கு அப்பாற்பட்ட பகுதி சர்வதேச நீர்ப்பரப்பாகும்.

இப்போது, இலங்கை நீர் பரப்பில் செயற்கை தீவு உருவாக்கப்படுவதால், அந்த தீவிலிருந்து கணக்கிட்டால், இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு மேலும் அதிகரிக்கிறது: சர்வதேச நீர் பரப்பு மேலும் தள்ளிப்போகிறது. சர்வதேச நியதிகளை மீறி, நிலப்பரப்பையும், நீர் பரப்பையும் விஸ்தரிக்கும் சதியில் சீனாவும், இலங்கையும் கூட்டாக ஈடுபட்டுள்ளனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


சிறப்பு பொருளாதார மண்டலம்

சீனா முன்னெடுக்கும் இந்த திட்டத்தால், இந்தியாவுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவின், 70 சதவீத கன்டெய்னர் போக்குவரத்து, கொழும்பு துறைமுகத்தின் வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பகுதியில், இந்திய பெருங்கடல் பிரதேசத்துக்குள் - கூடங்குளம் அணு உலைக்கு அருகிலேயே, சீன துறைமுக நகர் உருவாவது, அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் கொல்லைப்புறத்திலேயே, சீனா குடிவந்து விட்டது என்பதற்கான அடையாளம் இது.

வியூக வகுப்பு விவகாரங்களில், சிறந்த நிபுணரான கர்னல் ஹரிஹரன், சில முக்கிய விஷயங்களை முன்வைக்கிறார். 'இந்த சிறப்பு பொருளாதார மண்டலம், சீனாவுக்கு வர்த்தக நலன்களை மட்டும் தரப்போவதில்லை. 'உளவு மற்றும் உளவு முறியடிப்பை விரிவுபடுத்தவும் - இந்திய தொலை தகவல்களை ஒட்டுக் கேட்கவும், திருடவும் பயன்படுத்தப்படலாம். இந்திய நலன்களுக்கு எதிரானவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்வதற்கான கேந்திரமாகவும், சீனத் தீவு பயன்படுத்தப்படலாம்' என்கிறார்.

சீனாவில் 'பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தின் ஒரு பகுதியான, பட்டுச் சாலை திட்டத்தின் அம்சமாக, இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை, 'முத்துச்சரம்' திட்டம் என்றும் கூறுவர். தெற்காசிய நாடுகளை, ஒவ்வொன்றாக தன் பக்கம் கோர்த்து, தனக்கு அனுசரணையான ஒரு வளையத்தை - ஒரு மாலையை உருவாக்குவது தான் முத்துச்சரம் திட்டம். இந்த நேரத்தில், கடந்த ஆண்டு இலங்கை தந்த உத்தரவாதத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் வியூகப் பாதுகாப்பு கொள்கை, 'முதலில் இந்தியா' என்பதையே அடிப்படையாக கொண்டிருக்கும் என, இலங்கை உத்தரவாதம் தந்தது. கொள்கையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெளிவுபடுத்தியுள்ளார் என, இலங்கை வெளியுறவு துறை செயலர் அட்மிரல் ஜெயந்த் கொலம்பகே, 2020 நவம்பரில் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்போது நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், அந்த உத்தரவாதத்திலிருந்து இலங்கை விலகிச் செல்வது தெரிகிறது. இலங்கையில் இப்போதே, ஆறு இலட்சம் சீனர்கள் இருக்கின்றனர். இது, இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. இந்தியா தீவிரமாக செயலாற்ற வேண்டிய தருணமிது.
கோலாகல ஸ்ரீநிவாஸ்
பத்திரிகையாளர்
இ-மெயில்
kolahala2014@hotmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
22-ஜூன்-202109:04:33 IST Report Abuse
sankar இதெல்லாம் மோடிஜி அரசுக்கு பலவருடங்களாக தெரியும் பாதுகாப்பு விஷயமாக மத்திய அரசு தமிழ் நாட்டில் என்ன செய்தாலும் தமிழ் நாட்டு மக்கள் அதட்கு முழு ஆதரவு தரவேண்டும் எதிர்ப்பு அல்ல
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூன்-202123:00:11 IST Report Abuse
sankaseshan This move is going to affect not only India but also Sri Lanka in lonf run . Chinese are angering ecology of this region. Why TN parties are keeping quiet.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
20-ஜூன்-202120:39:20 IST Report Abuse
Murthy இந்திய செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறது. பிரபாகரன் இருந்தவரை சீனாவால் எதுவும் செய்யமுடியவில்லை. ஈழம் அமைந்திருந்தால் அது இந்தியாவின் நட்புநாடாக இருந்திருக்கும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
20-ஜூன்-202120:52:12 IST Report Abuse
தமிழ்வேள்ஈழம் அமைந்திருந்தால், தமிழகத்தின் அரசியல்வாதிகள் ஆயுத போராட்டத்தில் தனிநாடு கோரி இறங்கியிருப்பார்கள் ...இப்போது கூட ஈழம் அமைக்கலாம் ..ஆனால் தமிழகம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு வடக்கு தமிழகம் யூனியன் பிரதேசமாக்கப்படவேண்டும் ....தமிழகத்தில் தனிநாடு ஆசையும் பிரிவினைவாதம் இந்தியதுரோகம் இந்து துரோகம் வேர்விட்டு வளர்ந்துள்ளது ...ராணுவ நடவடிக்கை தேவை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X