அரசியல் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பூஞ்சைக்கு 2,382 பேர் பாதிப்பு

Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
சென்னை:''கறுப்பு பூஞ்சை நோய்க்கு, 2,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து
 கறுப்பு பூஞ்சைக்கு 2,382 பேர் பாதிப்பு

சென்னை:''கறுப்பு பூஞ்சை நோய்க்கு, 2,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து வைத்தார்.


விழிப்புணர்வு

மேலும், குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டையும் உதயநிதி திறந்து வைத்தார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால், 9,000க்கு கீழ் தொற்று குறைந்துஉள்ளது.மற்ற மாநிலங்களில், கொரோனா தொற்று பரவல், 8 முதல் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ௫ சதவீதமாகி உள்ளது.

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது மக்களும் ஆர்வமாக போட்டு கொள்கின்றனர். இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசி போடப்பட்ட மாநகராக, சென்னை திகழ்கிறது. இதுவரை தமிழகத்தில், 1.22 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வீணாகியது போக, 5.56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்திற்கு கூடுதலான தடுப்பூசிகள் வழங்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன்படி, தமிழகத்திற்கு தினமும் தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது.கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது. அவ்வாறு வந்தாலும், அதை சமாளிப்பதற்காக, 79 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், புதிதாக, ஒரு மாத காலத்தில் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன.


'மினி கிளினிக்'

டாக்டர்கள், கொரோனா பணிக்காக மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு 5,000க்கு கீழ் வரும்போது, அவர்கள் மீண்டும் மினி கிளினிக்குகளில் பணிக்கு அனுப்பப்படுவர். கோரிக்கைகிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.இதுவரை, 2,382 பேர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 111 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. கறுப்பு பூஞ்சை நோய்க்கு, முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான கோரிக்கை, முதல்வரிடம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X