பொது செய்தி

தமிழ்நாடு

'சுங்கச்சசாவடிகளை மூடுவதால் கடன் சுமையே அதிகரிக்கும்'

Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று முன்தினம், சென்னை ராஜிவ் காந்தி சாலையில் ஆய்வுப் பணி மேற்கொண்டார்.பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த போது, 'சென்னை மாநகர எல்லைக்குள் சுங்கச்சாவடி தேவையில்லை. அவற்றை அகற்ற வேண்டும் என, கடந்த காலங்களில், பொது மக்கள் பெரிய போராட்டங்கள் நடத்தினர். 'இந்த விவகாரம், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று முன்தினம், சென்னை ராஜிவ் காந்தி சாலையில் ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த போது, 'சென்னை மாநகர எல்லைக்குள் சுங்கச்சாவடி தேவையில்லை. அவற்றை அகற்ற வேண்டும் என, கடந்த காலங்களில், பொது மக்கள் பெரிய போராட்டங்கள் நடத்தினர். 'இந்த விவகாரம், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். சுங்கச்சாவடிகளை மூடுவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார்' என்றார்.

ராஜிவ் காந்தி சாலையில், ஐந்து சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றை நீக்குவது, அவ்வளவு சுலபமில்லை என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள். அவர்கள், மேலும் கூறியதாவது:ஒரு சாலையை மேம்படுத்தியவர்களே, அதற்கான செலவினங்களை, நீண்ட கால அளவில் திரும்பப் பெறுவதற்கே, சுங்கச் சாவடிகளை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அந்தச் சாலைப் பகுதியில் தொடர் பராமரிப்பும், கவனிப்பும் கூட, அந்தந்த ஒப்பந்ததாரர்களது கடமையாகும்.

ராஜிவ் காந்தி சாலையிலும், இத்தகைய சுங்கச்சாவடிகளே இயங்கி வருகின்றன. இவற்றை, 'ஐ.டி., எக்ஸ்பிரஸ்வே' என்ற, நிறுவனம் தான் உருவாக்கியது. இந்நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத்தின் துணை நிறுவனம். தரமணி முதல் சிறுசேரி வரையிலான சாலையை மேம்படுத்த, ஐ.டி., எக்ஸ்பிரஸ்வே நிறுவனம், 416 கோடி ரூபாய் செலவிட்டது.

கடந்த, 2008 முதல் படிப்படியாகச் செயல்பட துவங்கிய, ஐந்து சுங்கச்சாவடிகள் வாயிலாக, இந்நிறுவனத்துக்கு, 443 கோடி ரூபாய் வசூலாகி விட்டது. இதை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கண்டுபிடித்து தெரிவித்துள்ளது, சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.போட்ட பணம் தான் வசூலாகி விட்டதே, அதனால், சுங்கச் சாவடிகளை இலவசமாக ஆக்கி விடலாமா என்றால், முடியாது.

ஏனெனில், ஐ.டி., எக்ஸ்பிரஸ்வே நிறுவனத்துக்கு, இந்தச் சாலைகளை பராமரிக்கவும், மேம்படுத்தவும், அதற்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கவும், 2036ம் ஆண்டு இறுதி வரை, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தச் சாலையை ஒட்டியுள்ள நடைபாதைகளை உருவாக்கவும், ஏராளமான இதர வசதிகளை மேம்படுத்தவும், இந்நிறுவனமே பொறுப்பேற்று உள்ளது.

இந்த சாலையை உருவாக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் வாங்கிய கடனில், 100 கோடி ரூபாய் வரை, இன்னும் மிச்சமிருக்கிறது. மேலும், 2036 வரை, சுங்கச்சாவடிகளை இயக்கினால், 800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஒருவேளை, தற்போது தமிழக அரசு, சுங்கச் சாவடிகளை மூடிவிட்டு, ராஜிவ் காந்தி சாலை பயணத்தை, இலவசமாக மாற்றுமானால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத்தின் கடனை ஏற்க வேண்டியிருக்கும்.

அதேபோல, அந்தச் சாலையில் இனிமேல் நடைபெறவிருக்கும், அத்தனை மேம்பாட்டுப் பணிகளுக்குமான செலவையும், அரசே ஏற்க வேண்டியிருக்கும். தமிழக அரசு, இன்று சந்தித்து வரும் நிதி நெருக்கடியில், இதெல்லாம் கூடுதல் சுமை. இதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொள்ள கூடாது. அதற்கு பதிலாக, இந்தச் சுங்கச்சாவடிக்கு அருகே வாழ்பவர்களுக்கு, 'ஜீரோ டோல்' என்ற, அனுமதி வழங்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி, கட்டணமில்லாமல் உள்ளூர்வாசிகள் பயணம் செய்யலாம்; வேண்டுமானால் அதை, மேலும் விரிவுபடுத்தலாம்.

எல்லாருக்கும் இந்தச் சாலை இலவசம் என்றால், மற்ற சாலைகளை போல் இது, சிறிது காலத்தில் போதிய பராமரிப்பு இன்றி, குண்டும், குழியும் ஆவது நிச்சயம். இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.


- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X