ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? : 24ல் மோடி பேச்சு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி :ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது, அங்கு சட்டசபை தேர்தல்நடத்துவது ஆகியவை குறித்து, அரசியல் கட்சி தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24ல் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு - -காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரண்டு
ஜம்மு - காஷ்மீர் ,மாநில அந்தஸ்து ,24ல்,மோடி பேச்சு

புதுடில்லி :ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது, அங்கு சட்டசபை தேர்தல்நடத்துவது ஆகியவை குறித்து, அரசியல் கட்சி தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24ல் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு - -காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன்பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்ட சபையை உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அனைத்துக் கட்சி கூட்டம்தற்போது ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 24ம் தேதி டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது.இதில் பங்கேற்க, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முறையான அழைப்பு விரைவில் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், ஜம்மு - காஷ்மீரில், தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும்.இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி முடிந்ததும், இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் சட்ட சபை தேர்தலை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


அழைப்புதேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்துள்ளதாக கட்சிகளும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.


மெஹபூபா உறவினர் விடுதலைமக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தியின் உறவினரும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சர்தாஜ் மதானி, வீட்டுச் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.ஜம்மு - காஷ்மீரில், மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கு தேர்தல் நடந்த நிலையில், கடந்தாண்டு டிச., 21ல் அவர் உட்பட கட்சித் தலைவர்கள் பலர்முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சர்தாஜ் மதானி விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூன்-202122:49:55 IST Report Abuse
sankaseshan Mehabooba mufty not going to att PM,s meeting on 24th . National conference may follow suit. These fellows don't think about common people and developments of state selfish thugs .
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
20-ஜூன்-202120:34:26 IST Report Abuse
தமிழ்வேள் காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தல்கள் அவசியம் இல்லை . முதலில் தேசிய நீரோட்டத்துக்குள் முழுவதுமாக வரட்டும் ..பாகிஸ்தான் சிதறி அழியும் வரை காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருப்பதே நல்லது ..தேர்தல் வைக்கப்பட்டால் , மாநில கட்சிகளுக்கு அனுமதிக்கூடாது ..காஷ்மீரின் பெரும்பாலான காட்சிகள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத காட்சிகளே ....
Rate this:
Cancel
v j antony - coimbatore,இந்தியா
20-ஜூன்-202119:40:58 IST Report Abuse
v j antony நல்ல முயற்சி மக்கள் ஜனநாயக பாதைக்கு திரும்புவார் அங்கு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும் இதன்முலம் மாற்றங்கள் நடக்கும் அந்நிய முதலீடுகள் வரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X