அதிகரிக்கும் அழுத்தம் இயக்குனர் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் அழுத்தம் இயக்குனர் கவலை

Added : ஜூன் 19, 2021
Share
சென்னை:கோலி சோடா திரைப்படத்தின் இயக்குனர் விஜய்மில்டன். சென்னை, செங்குன்றத்தில், மாமியாரின் தொல்லை தாங்காமல் கர்ப்பிணி போல் நடித்து, உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்த பெண் கனிமொழி குறித்து, இவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 'டுவிட்டரில்' அவர் கூறியுள்ளதாவது:இப்பெண் கர்ப்பிணியாக நடிக்க நேர்ந்தது போல, நாமும் 'பிசி'யாக இருப்பது போல்,
 அதிகரிக்கும் அழுத்தம் இயக்குனர் கவலை

சென்னை:கோலி சோடா திரைப்படத்தின் இயக்குனர் விஜய்மில்டன். சென்னை, செங்குன்றத்தில், மாமியாரின் தொல்லை தாங்காமல் கர்ப்பிணி போல் நடித்து, உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்த பெண் கனிமொழி குறித்து, இவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

'டுவிட்டரில்' அவர் கூறியுள்ளதாவது:இப்பெண் கர்ப்பிணியாக நடிக்க நேர்ந்தது போல, நாமும் 'பிசி'யாக இருப்பது போல், மிடுக்கான உடை, பெரிய கார் என, எவ்வளவு வேடம் போட வேண்டியுள்ளது. நாம் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ இதேபோன்ற அழுத்தத்தை, நம்மை சுற்றிலும் கடத்திக் கொண்டிருக்கிறோம். அப்பெண், நான்கு மாதமாக மனதளவில் எத்தனை துன்பத்தை அனுபவித்திருப்பாள் என யோசிக்கையில், கோபம் வருகிறது. என்னவெல்லாம் அவள் யோசித்திருந்தால், இப்படி ஒரு விடுதலையை தேர்ந்தெடுத்திருப்பாள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X