பொது செய்தி

தமிழ்நாடு

ஆதி சைவர் இனத்தை காப்பாற்றுங்கள்: முதல்வரிடம் சிவாச்சாரியார்கள் மனு

Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
சென்னை:'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற, அமைச்சர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, ஆதி சைவர்களின் இனத்தை பாதுகாக்க உதவ வேண்டும்' என, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் டில்லி நிர்வாகிகள், முதல்வரிடம் அளித்த மனு:ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சமூகம், ஆண்டாண்டு காலமாக, பூஜைகள் மற்றும்

சென்னை:'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற, அமைச்சர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, ஆதி சைவர்களின் இனத்தை பாதுகாக்க உதவ வேண்டும்' என, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் டில்லி நிர்வாகிகள், முதல்வரிடம் அளித்த மனு:ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சமூகம், ஆண்டாண்டு காலமாக, பூஜைகள் மற்றும் கைங்கர்யங்கள் செய்து வரும் மிகச்சிறிய சமூகம். தமிழகம் முழுதும் ஐந்து லட்சம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அர்ச்சகர்களுக்கு சில இடங்களில், மாதம், 500 முதல், 1,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

பல கோவில்களில் சம்பளமே கிடையாது.இந்நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் அறிவிப்பு, எங்கள் சமூகம் சார்ந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதோடு, அனைத்து ஜாதியினரும் பல கோவில்களில், அர்ச்சகர்களாக உள்ளனர். பாடல் பெற்ற ஷேத்திரங்கள் மற்றும் சிறிய, பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக, மற்ற ஜாதியினர் இல்லையே என்ற கேள்வி எழலாம். அந்த மாதிரியான கோவில்களில், சிவபெருமானால் அருளப்பட்ட ஆகம மரபுபடியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படியும், அர்ச்சகர்களாக, சிவாச்சாரியார்களே பணிபுரிந்து வருகின்றனர்.

அந்தக் கோவில்களில், ஆகம விதிமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்கு மாறாக, பூஜை செய்ய, யாரையும் நியமிக்க முடியாது என, தீர்ப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளன. 'பிற ஜாதியினர் ஒரு சிலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. அவர்கள் நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். நுாறு நாட்களுக்குள் அவர்கள் நியமிக்கப்படுவர்' என, அமைச்சர் பேசி இருக்கிறார்.

ஒரு கோவிலில் அர்ச்சகராக பூஜை செய்ய வேண்டும் என்றால், ஐந்து முதல் ஏழு ஆண்டுகளாவது, முழு நேரமாக ஆகம கல்வி பயின்று இருக்க வேண்டும். அதற்கான முறையான அனுஷ்டானங்களை, சிறு வயது முதல் குருகுலவாசமாக கற்றுணர்ந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு சில மாதங்கள் மட்டும் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள், அர்ச்சகர்களாக ஆகம வழிபாடு நடக்கிற கோவில்களில் பணியாற்ற முடியாது.

முதல்வராகிய தாங்கள், அனைத்தையும் முறையாக பரிசீலித்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்ற, அமைச்சரின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சமூகத்திற்கு, எந்தவித கஷ்டங்களும், அச்சுறுத்தல்களும் ஏற்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதி சைவர்களின் இனத்தை பாதுகாக்க, தாங்கள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X