அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொல்வது ஒன்று; செய்வது ஒன்று: தி.மு.க., மீது பன்னீர்செல்வம்., புகார்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை:'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அறிவித்து விட்டு, தற்போது, 'நீட்' தேர்வு உண்டு என்பது, சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'நீட்' தேர்வு மற்றும் பயிற்சிகள், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது, முழு
சொல்வது ஒன்று; செய்வது ஒன்று: தி.மு.க., மீது பன்னீர்செல்வம்., புகார்

சென்னை:'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அறிவித்து விட்டு, தற்போது, 'நீட்' தேர்வு உண்டு என்பது, சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:'நீட்' தேர்வு மற்றும் பயிற்சிகள், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. நீட் தேர்வுக்கான அறிவிப்பு 2010 டிச., 21ல் வெளியிடப் பட்டு, அதே மாதம் 27ம் தேதி, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததாக, அமைச்சர் தவறுதலாக கூறியுள்ளார். அப்போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்தது.

எனவே தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதற்கு, இதை விட ஒரு ஆதாரம் தேவையில்லை. அடுத்து 2011ல், தி.மு.க., தலைவர், சென்னை உயர் நீதிமன்றம் சென்று, தடையாணை பெற்றதாக அமைச்சர் கூறியுள்ளார்.மத்திய அரசின் அங்கமாக இருந்து சட்டம் போட்டு விட்டு, நீதிமன்றத்தை நாடியது முறைதானா என்பதை, அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

நீட் தேர்வு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டதும், அதை திரும்ப பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி கொண்டிருக்க வேண்டும்.அப்போதே, ஆதரவு வாபஸ் ஆயுதத்தை பயன்படுத்தி இருந்தால் நீட் தேர்வு என்ற பிரச்னையே இருந்திருக்காது.இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வு இருக்காது என, மாணவ - மாணவியர் நினைத்த நிலையில், தேர்வுக்கு ஆன்லைனின் பயிற்சி என்ற அறிவிப்பு, மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதை, அரசின் கவனத்திற்கு கொண்டு வர, அறிக்கை வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து, 'இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உண்டு' என, அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என, தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்து விட்டு, தற்போது தேர்வு உண்டு என்று கூறுவது, சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதையே காட்டுகிறது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது விட்டு விட்டு, இப்போது தி.மு.க., பேசுவது, கொம்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmathivanan - Trichy ,இந்தியா
21-ஜூன்-202103:42:46 IST Report Abuse
kmathivanan தமிழன் பிரசன்னா கதை எப்படி ?
Rate this:
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
20-ஜூன்-202121:16:47 IST Report Abuse
kmathivanan நீட் கொண்டு வரும்போது Thimuka மத்திய அரசில் என்ன செய்தது , Nalini Chidambaram பேசும் போது என்ன செய்தது ? இதற்க்கு திமுக பதில் அளிக்க முடியாது
Rate this:
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
20-ஜூன்-202121:07:26 IST Report Abuse
kmathivanan இன்னும் இங்கு பார்க்கப்படும் முட்டு கொடுப்பு பார்த்தால் பிரசாந்த் கிஷோர் இன்னும் திமுக சர்விஸ்ல இருக்கார் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X