பொது செய்தி

இந்தியா

மூன்றாவது அலை: அபாய மணி அடிக்கிறார் எய்ம்ஸ் இயக்குனர் 

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (18+ 11)
Share
Advertisement
புதுடில்லி :''இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை தவிர்க்க முடியாது; இன்னும் ஆறு முதல் எட்டு வாரங்களில், மூன்றாவது அலை பரவத் துவங்கும். முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, நம் மக்கள் பாடம் கற்கவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், கூட்டமாக கூடி தொற்று பரவலை அதிகரிக்கின்றனர்,'' என, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா
6- 8 வாரங்கள், மூன்றாவது அலை ,அபாய மணி  எய்ம்ஸ்

புதுடில்லி :''இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை தவிர்க்க முடியாது; இன்னும் ஆறு முதல் எட்டு வாரங்களில், மூன்றாவது அலை பரவத் துவங்கும். முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, நம் மக்கள் பாடம் கற்கவில்லை.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், கூட்டமாக கூடி தொற்று பரவலை அதிகரிக்கின்றனர்,'' என, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.முதல் மற்றும் இரண்டாம் அலையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் தொற்று ஒழிந்துவிட்டது என மக்கள் கருதுகின்றனர். கூட்டமாக கூடத் துவங்கிவிட்டனர்.

சமூக இடைவெளியை சிறிதும் கடைப்பிடிப்பதில்லை; முக கவசம் அணியாமல் சுற்றித் திரிகின்றனர். இதனால் மூன்றாவது அலை தாக்கத்தையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதே இதன் தாக்கம் துவங்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் மூன்றாவது அலை பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.நம் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்து இதன் தாக்கம் இருக்கும். இரண்டாவது அலையில் புதிய உருமாறிய வைரஸ், வெளியில் இருந்து வந்து இங்கு பரவியது. இதனால், பாதிப்பு அதிகரித்தது. உருமாறிய வைரஸ் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இதனால் 'ஹாட்ஸ்பாட்' பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இதன் தாக்கத்தை தடுக்க தடுப்பூசி போடுவது தான் ஒரே வழி.இவ்வாறு அவர் கூறினார்.


மீண்டும் துவங்கும் வினியோகம்



உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் அதனோம் கேப்ரியாசிஸின் மூத்த ஆலோசகர் புரூஸ் ஆல்வார்டு கூறியுள்ளதாவது:உலகின் பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இந்தியா உதவி செய்துள்ளது. இந்தியாவில் தேவை அதிகரிப்பு, இரண்டாவது அலை பரவல் காரணமாக வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் இந்தியாவிடமிருந்து தடுப்பூசி பெற்ற நாடுகளில், முதல் 'டோஸ்' பெற்றவர்கள், இரண்டாவது டோஸ் பெற முடியாத நிலை உள்ளது.இரண்டாவது டோஸ் செலுத்த காத்திருக்கும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான தடுப்பூசி வினியோகம் மீண்டும் துவக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஆஸ்ட்ராஜெனகா, சீரம் நிறுவனங்களுடனும், இந்திய அரசுடனும் பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


கவனம் தேவை: அரசு அறிவுரை



மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சக செயலர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் வேகப்படுத்த வேண்டும். கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை புறக்கணித்து, மக்கள் கூட்டமாக கூடுவது வழக்கமாக உள்ளது. இதனால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூன்-202123:00:59 IST Report Abuse
Pugazh V சென்னை ஜி எஸ் ராஜன் நிஜமான யதார்த்த மான வரிகள் .//கொரோனா மூன்றாம் அலை வந்தாலென்ன முப்பதாம் அலை வந்தால் என்ன ??விதி வந்து சாவறவன் செத்துத்தான் ஆகணும் ,அதை இறைவனே நேரில் வந்தா கூட மாத்த முடியாது ,// பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
20-ஜூன்-202121:10:45 IST Report Abuse
NicoleThomson மூன்றாவது அலை என்று சொல்லாதீர்கள் சுனாமி என்று சொல்லுங்க
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஜூன்-202110:46:59 IST Report Abuse
g.s,rajan அலைகள் ஓய்வதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X